சாக்லெட் தோசை சாப்பிட்டிருக்கிறீர்களா..? வைரலாகும் இந்த வீடியோவைப் பாருங்கள்..!

சாக்லெட் தோசை சாப்பிட்டிருக்கிறீர்களா..? வைரலாகும் இந்த வீடியோவைப் பாருங்கள்..!
சாக்லெட் தோசை
  • News18
  • Last Updated: October 4, 2019, 12:56 PM IST
  • Share this:
சமூக வலைதளங்களில் எண்ணற்ற வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் பகிரப்படுகின்றன. ஆனால் அதில் ஏதாவது ஒன்றுதான் அன்றைய நாளின் ஹிட் வீடியோவாகிறது. அந்த வகையில் நேற்று தெருவோரக் கடை ஒன்றில் யம்மி சுவையில் சாக்லேட் தோசை சுடும் வீடியோ வைரலாகப் பரவியது.

அந்த வீடியோவில் எப்போதும் போல் அரிசி மாவில் தோசை ஊற்றுகிறார். அதன் மேல் சாக்லெட் சிரப்பை சுற்றிலும் ஊற்றுகிறார். பின் சிரப்பின் மேல் முந்திரி, உலர் திராட்சை, ஜெர்ரி பழங்கள் என அருமையாகத் தூவுகிறார். அவை தோசை வெந்து உண்ணும் பதத்திற்கு வந்ததும் தோசையை உருளையாக மடித்து விடுகிறார். சாக்லெட் தோசை தயார்.

54 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மக்களும் அதைப் பார்த்து யம்மி டேஸ்ட் , தானும் வீட்டில் செய்து பார்க்கப் போவதாகவும் கருத்துக்கள் கூறி வருகின்றனர். சிலர் இது கெட்ட சுவை, பொருத்தமற்ற சுவை, பொருத்தமற்ற ரெசிபி என்றும் கூறி வருகின்றனர்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: October 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading