Home /News /lifestyle /

உருளைக்கிழங்கை ஃபிரிட்ஜில் வைத்தால் ஆபத்தா..? இனியும் இந்த தவறை செய்யாதீர்கள்...

உருளைக்கிழங்கை ஃபிரிட்ஜில் வைத்தால் ஆபத்தா..? இனியும் இந்த தவறை செய்யாதீர்கள்...

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட உருளைக்கிழங்கை வேக வைத்தாலோ, எண்ணையில் வறுத்தாலோ, அதில் இருக்கும் சர்க்கரை மற்றும் அமினோ ஆசிட் (Amino acid) ஒன்றாகக் கலந்து அக்ரைலாமிட் (Acrylamide) என்ற வேதிப்பொருளை உருவாக்க தூண்டுகிறது.

    நவீன தொழில்நுட்பங்களின் விளைவாக உண்டான எந்திரங்கள் வாழ்க்கையை எளிமையாக்கியுள்ளன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இன்னொரு பக்கம் வாழ்க்கையில் சிக்கல்களையும் அதிகப்படுத்தியுள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் ஃப்ரிட்ஜ் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் சில செயல்களையும் செய்கிறது. நம்ப முடியவில்லையா? வீடுகளில் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால் சில வகையான கேன்சர் பாதிக்க வாய்ப்பு இருக்கிறதாம்.

    நீங்கள் ஃப்ரிட்ஜில் உருளைக்கிழங்கை சேமித்து வைத்தால், அதிலுள்ள குளிர்ச்சி உருளைக்கிழங்கில் இருக்கும் ஸ்டார்ச்சை (Starch), சர்க்கரையாக மாற்றுகிறது. பல்வேறு ஆபத்தான புற்றுநோய்களை உண்டாக்கும் ஒரு ரசாயன தூண்டுதலை இந்தச் சர்க்கரை உடலில் உண்டாக்கும்.

    உணவு தர முகமை நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டபடி, ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட உருளைக்கிழங்கை வேக வைத்தாலோ, எண்ணையில் வறுத்தாலோ, அதில் இருக்கும் சர்க்கரை மற்றும் அமினோ ஆசிட் (Amino acid) ஒன்றாகக் கலந்து அக்ரைலாமிட் (Acrylamide) என்ற வேதிப்பொருளை உருவாக்க தூண்டுகிறது.



    அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி நடத்திய ஆய்வின் படி, ஸ்டார்ச் அடங்கிய உணவுப்பொருட்களை வறுக்கும் போதோ, வேகவைக்கும் போதோ அக்ரைலாமைட் (Acrylamide) என்ற வேதிப்பொருளானது உருவாகிறது. பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் உருவாக்கத்தில் இந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

    குளிர்க்காலத்தில் தயிர் சாப்பிடலாமா..? சளி மற்றும் இருமலை உண்டாகும் என்பது உண்மையா..?

    அக்ரைலாமைட் (Acrylamide) என்ற வேதிப்பொருளானது 2002-ம் ஆண்டு முதன் முறையாக கண்டறியப்பட்டது. அதன் பின் நடத்திய ஆய்வுகளில், அதிக வெப்பநிலையில் சமைக்கப்பட்ட ஸ்டார்ச் உணவுகளை உட்கொள்பவர்கள், பல்வேறு புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.



    சமையலுக்கு முன்னதாக 15-30 நிமிடங்கள் உருளைக்கிழங்கை நறுக்கி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் என சமையல் கலைஞர்கள் கூறுகின்றனர். இந்த முறையானது சமைக்கும் போது அக்ரிலாமைட் (Acrylamide) வேதிப்பொருள் உருவாவதைத் தடுக்கிறது.

    அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி பரிந்துரையின்படி உருளைக்கிழங்குகள் காற்றோட்டமான இடத்தில், அறை வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டும். அதேபோல, அதிக வெப்ப நிலையில் உருளைக்கிழங்குகளை சமைக்க கூடாது.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Fridge, Kitchen Hacks, Kitchen Tips, Potato

    அடுத்த செய்தி