அதன் பிரஷர் தானாக இறங்கிய பிறகு குக்கர் மூடியை திறங்கள். தற்போது கரண்டியால் சாதத்தை கிளறிப்பாருங்கள். பூப்போல சாதம் வெந்திருக்கும். இந்த குறிப்பு : பயன்படுத்துவது புதிய அரிசியாக இருப்பின் 2 1/2 டம்ளர் தண்ணீர் வைத்தால் போதுமானது. பழைய அரிசியாக இருந்தா 3 டம்ளர் ஊற்றலாம்.
முந்தைய நாள் மீதமான சாதத்தை மறுநாளில் சூடு செய்து சாப்பிடுவதில் பாதிப்பு இருக்கிறது
முந்தைய நாள் இரவு தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் தயிர் கலந்து சாப்பிடும் பழைய சோற்றின் ருசியே தனிதான். இதனால் பல நன்மைகள் உள்ளன. மலச்சிக்கல் பிரச்னை, உடல் உஷ்ணம், வயிறு எரிச்சல் என பலவகையான பிரச்னைகளுக்கும் பழைய சோறு நல்ல மருந்து.
ஆனால் அதே மீந்துபோன சோறை மறுநாள் சூடாக்கி சுடச்சுட சாப்பிட்டால் அது விஷமாகும் என ஆய்வு கூறுகிறது. அதாவது இங்கிலாந்தைச் சேர்ந்த தேசிய சுகாதார மையம் நடத்திய மருத்துவ ஆய்வில் மீதமான சோற்றை மறுநாள் காலை சூடாக்கி சாப்பிட்டால் அது ஃபுட் பாய்சனாகும் என்று கூறப்பட்டுள்ளது.
சுகாதார அமைப்புப் படி சமைக்காத அரிசியில் பேசிலஸ் செரியஸ் (Bacillus cereus) என்னும் பாக்டீரியா இருக்கிறது. அது ஃபுட் பாய்சனை உண்டாக்கக் கூடிய பாக்டீரியா. அது சமைத்த பின்பும் உயிர் வாழும் ஆற்றல் கொண்டது. எனவே அந்த உணவை அப்படியே சேமித்து அறையின் வெப்பநிலையில் வைத்திருந்தால் அவை வேகமாக வளரும் ஆற்றல் கொண்டவை. எனவே அதை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது உடல் நலத்திற்கே தீங்கு விளைவிக்கக் கூடியது.
அதாவது மீந்த சோறை அப்போதே உடனே ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் காலை சூடாக்கி சாப்பிடலாமாம். அதுவும் ஒரு நாளைக்கு மேல் வைத்து சாப்பிடக்கூடாது. அதேபோல் காலை சமைத்த உணவு இரவு ஃபிரிட்ஜில் வைத்தால் அதில் பலனில்லை.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.