கோடையில் நமக்குப் பிடித்த பழங்களை மிகவும் ஆசையாக வாங்கி விரும்பி சாப்பிடுவோம். கோடை சீசன்களில் கிடைக்கும் மிகவும் சுவையான ஒரு பழம் தான் மாம்பழம். மாம்பழத்தை அப்படியே கடித்து அதன் உள் இருக்கும் சதை மற்றும் ஜூஸை லாவகமாக சாப்பிட விரும்பும் நாம், அதன் தோலை மட்டும் கடித்து சாப்பிடுவது பற்றி எப்போதாவது சிந்தித்து இருக்கிறோமா.?
பொதுவாக மாம்பழத்தின் தோலை உரித்து தானே சாப்பிடுவோம், அப்படியே சாப்பிட்டால் கூட அதன் தோலில் பற்களால் கடித்து துளையை போட்டு மாம்பழ சாறு மாற்று சதையை தானே சாப்பிடுவோம் என்று தானே நீங்கள் யோசிக்கிறீர்கள். உண்மை தான், மாம்பழத்தோலை யார் தான் சாப்பிடுகிறார்கள்.? ஆனால் நாம் மாம்பழ தோலை சாப்பிட வேண்டுமா என்ன..? அதில் என்ன சத்து இருக்கிறது.? இதற்கான பதில்களை இங்கே பார்க்கலாம்.
சமீபத்திய ஆராய்ச்சிகள் மாம்பழத்தை விட அதின் தோல்களில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கலாம் என்று சுட்டிக்காட்டுகின்றன. University of Queensland School of Pharmacy நடத்திய ஆய்வு, கொழுப்பு செல்கள் உருவாவதை குறைப்பதன் மூலம் எடையை குறைக்க மாம்பழத் தோல்கள் உதவும் என்று கூறுகிறது. மேலும் சில ஆராய்ச்சிகள் புற்றுநோய் செல்களைக் குறைப்பதில் அல்லது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் மாம்பழத் தோலின் பங்கை குறிப்பிட்டு உள்ளன.
மாம்பழங்களின் தோலை சாப்பிடுவது உடலுக்கு எப்படி நன்மைகளை தருகிறது.?
பல பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்களில் நார்ச்சத்து மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் அதிகம். அந்த வகையில் மாம்பழ தோலில் தாவர கலவைகள் (plant compounds), நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இவை நோய்களை தடுக்கவும், வயதாகும் செயல்முறையை மெதுவாக்கவும் உதவுகின்றன. அது மட்டுமின்றி, வைட்டமின் ஏ, சி, பி6, கே, ஃபோலேட், மெக்னீசியம், கோலின், பொட்டாசியம், காப்பர் போன்ற சத்துக்கள் மாம்பழத் தோலில் நிறைந்துள்ளன. மாம்பழ தோல் :ஃபோலேட், வைட்டமின் ஏ, , சி, உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும்.
விலை ஏறும் போது கவலை வேண்டாம்... தக்காளியை போலவே புளிப்பு சுவை கொண்ட இந்த பொருட்களை முயற்சித்து பாருங்கள்...
அதிக நார்ச்சத்து:
மாம்பழத்தோல் மிக அதிக நார்ச்சத்து கொண்டது. இதனால் மாம்பழத்தோல் செரிமான அமைப்புக்கு மிகவும் நல்லது. மாம்பழத்தோலில் உள்ள அதிக நார்ச்சத்து இதய நோயைத் தடுக்கவும் உதவும். மாம்பழத்தோலை உட்கொண்ட ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு சுமார் 40% குறைவு என்பது தெரிய வந்துள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு உதவ கூடியது:
மாம்பழ தோலை உட்கொள்வது உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். மாம்பழத்தின் சதை போலல்லாமல், அதன் தோல் உண்மையில் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மாம்பழத் தோல்களில் ட்ரைடர்பென்ஸ் மற்றும் ட்ரைடர்பெனாய்ட்ஸ்கள் உள்ளன . இவை நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவும் தாவர கலவைகள் ஆகும்.
சரும ஆரோக்கியத்திற்கு நன்மை:
காய்ந்த மாம்பழ தோல்களை ஃபேஷியல் பொருளாக மீண்டும் பயன்படுத்தலாம். உலர்ந்த மாம்பழ தோலைப் பொடி செய்து அதை தயிரில் கலந்து ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். இந்த ஃபேஸ் பேக் கோடைக்காலத்தில் சருமத்தை பராமரிக்க சிறப்பாக உதவும். மேலும் இந்த மாம்பழ தோல் ஃபேஸ் பேக், மந்தமான சருமத்திற்கு இயற்கையான தீர்வாகவும், திட்டுக்கள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றவும் உதவுகிறது. மாம்பழ தோலில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் சி இது ஒரு நல்ல ஆன்டி-டேனிங் ஏஜென்டாக செயல்படுகிறது.
சிவப்பு அரிசியை தினசரி உணவாக சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..? ரெசிபியும் உள்ளே...
புற்றுநோய்க்கு எதிராக..
மாம்பழத் தோல்களில் மாங்கிஃபெரின், நோராதைரியோல் மற்றும் ரெஸ்வெராட்ரோல் உள்ளன. இவை நுரையீரல், பெருங்குடல், மார்பகம், மூளை மற்றும் முதுகுத் தண்டு புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்களை தடுக்க அல்லது எதிர்த்து போராட உதவும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடென்ட்ஸ் ஆகும்.
மாம்பழ தோலை எப்படி சாப்பிடலாம்.!
ஆப்பிள், பேரிக்காய் அல்லது பீச் போன்ற பழங்களை தோலை அகற்றாமல் கடித்து சாப்பிடுவது போல மாம்பழத்தை உட்கொள்வதே எளிதான வழி. மாம்பழத்தை சாப்பிடும் உன் அதன் தோலை நன்கு கழுவி பின்னர் பழத்தை தோலுடன் கடித்து சாப்பிடலாம். ஆனால், இப்படி சாப்பிடுவது பழத்தின் சுவையையே கெடுத்து விடும் என்பதை நாங்கள் ஒப்பு கொள்கிறோம். எனவே உங்களுக்கு பிடித்த ஸ்மூத்தியுடன் மாம்பழ தோலைக் கலந்து சாப்பிடலாம். ஒருவர் அதன் சாற்றை சாறுகள் மற்றும் பிற திரவங்களில் சேர்க்கலாம். அல்லது நீங்கள் மாம்பழத்தோலின் சாற்றை ஜூஸ்கள் மற்றும் பிற பானங்களில் சேர்க்கலாம். நீங்கள் அவற்றை சுத்தம் செய்து கழுவி பின் வறுத்து சட்னி மற்றும் டிப்ஸிலும் (dips) கூட சேர்க்கலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.