ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Diwali 2022 : சர்க்கரை நோயாளிகளும் இந்த தீபாவளிக்கு ஸ்வீட் சாப்பிடலாம் : இந்த ரெசிபியை கவனியுங்கள்..!

Diwali 2022 : சர்க்கரை நோயாளிகளும் இந்த தீபாவளிக்கு ஸ்வீட் சாப்பிடலாம் : இந்த ரெசிபியை கவனியுங்கள்..!

சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்பு

சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்பு

இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சம்பழத்தில் இனிப்பு சுவையும் அதிகமாக இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ட்ரீட்டாக இருக்கும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாடு முழுவதும் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசுகள், விளக்கு அலங்காரங்கள், இனிப்பு வகைகள் ஆகியன முக்கியம் இடம் பிடிக்கின்றனர். பண்டிகையை முன்னிட்டு, இன்றிலிருந்தே பல வீடுகளிலும் பலகாரங்கள் செய்யும் வேலை களைக்கட்டியிருக்கும், லட்டு, அதிரசம், ஜிலோபி, குலோப் ஜாமூன், மைசூர்பாகு போன்ற பலவகையான இனிப்பு மற்றும் காரவகைகளை செய்து அக்கம் பக்கத்து வீட்டார், உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு, நாமும் சாப்பிட்டு கொண்டாடுவோம்.

இந்த பண்டிகை நாளில் சர்க்கரை நோயாளிகளின் பாடுதான் திண்டாட்டம். நெய் மணம் வீசும் புத்தம் புது பலகார வகைகளை அவர்களால் பார்த்து நாவுற முடியுமோ தவிர, எதையும் சாப்பிட முடியாது. ஆசை யாரை விட்டது என திருட்டுத்தனமாக சாப்பிட்டுவிட்டால், சுகர் லெவல் அதிகமாக உடனே காட்டிக்கொடுத்துவிடும்.

எனவே தான் நாங்கள் வீட்டிலேயே கிடைக்கூடிய சில எளிமையான பொருட்களை கொண்டு, சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடக்கூடிய சில ரெசிபி ஐடியாக்களை கொடுத்துள்ளோம்.

1. மிக்ஸ்டு நட்ஸ் அல்வா:

நட்ஸ் வகைகள் எப்போதுமே அனைவரும் சாப்பிடக்கூடிய சத்தான பொருளாக உள்ளது. எனவே பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த நட்ஸ் வகைகளை வைத்து சத்தான மற்றும் சுவையான ரெசிபி இதோ உங்களுக்காக...

தேவையான பொருட்கள்:

வறுத்த பாதம் - 1 கப்

வறுத்த வேர்க்கடலை - 1 கப்

பிஸ்தா - 1/2 கப்

வால்நட்ஸ் - 1/2 கப்

குறைவான கொழுப்புள்ள பால் - 2 கப்

ஸ்டீவியா சர்க்கரை - 1 டீஸ்பூன்

செய்முறை:

அனைத்து நட்ஸ் வகைகளையும் லேசாக வறுத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து குறைவான கொழுப்புள்ள 2 கப் பாலைச் சேர்த்து, கொதிக்கவிடவும். அதன் பின்னர் தீயை மிதமான அளவில் வைத்து அரைத்து வைத்துள்ள நட்ஸ் பவுடரை அதனுடன் சேர்க்கவும். இப்போது நன்றாக கிளறிக்கொண்டே இருந்தால் இந்த கலவையானது அல்வா பதத்திற்கு வர ஆரம்பிக்கும். அப்போது சர்க்கரை துளசி என அழைக்கப்படும் ரெபாடியானா தாவரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட ஸ்டீவியா சர்க்கரையை 1/2 முதல் 1 டீஸ்பூன் வரை சேர்த்து கலக்கவும். கிளாசிக் டச் வேண்டும் என நினைப்பவர்கள் வேண்டுமென்றால் 1 டீஸ்பூன் நெய் இறக்கும் முன்பு சேர்த்துக்கொள்ளலாம்.

Also Read : தீபாவளிக்கு சோமாசு செய்ய போறீங்களா..? இந்த முறை இப்படி செஞ்சு பாருங்க...

2. அஞ்சீர் பர்பி (அத்திப்பழ பர்பி):

கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ள அத்திப்பழத்தில் தேவையான அளவு இனிப்பு சுவையும் இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு பேரானந்தத்தை அள்ளிக்கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:

ட்ரை அத்தி- 1/2 கப்

குறைந்த கொழுப்புள்ள பால் - 1 லிட்டர்

ஏலக்காய் தூள் - சிறிதளவு

அலங்கரிக்க வறுத்த, பொடியாக்கப்பட்ட நட்ஸ் வகைகள் - தேவையான அளவு

செய்முறை:

அரை கப் அத்திப்பழத்தை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 லிட்டர் குறைவான கொழுப்புள்ள பால் சேர்த்து சூடுபடுத்தவும். அத்துடன் பேஸ்ட்டாக அரைத்து வைக்கப்பட்டுள்ள அத்திப்பழத்தை சேர்த்து, பாத்திரத்தில் ஒட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். இந்த பேஸ்ட் நன்றாக கெட்டியானதும், ஏலக்காய் தூள் மற்றும் நட்ஸ் வகைகளை சேர்த்து கிளறி விடவும். அதன் பின்னர் இந்த கலவையை கிரீஸ் ட்ரேயில் ஊற்றி, வட்டம், சதுரம், முக்கோணம், செவ்வகம் என விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.

3. ஸ்ரீகண்ட்:

குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பிரபலமான இந்த டெஸெர்ட் வகை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றது.

தேவையான பொருட்கள்:

கெட்டித் தயிர் - 2 கப்

ரோஸ் வாட்டர் - 2 டீஸ்பூன்

தேன் அல்லது ஸ்டீவியா சர்க்கரை - 1 டீஸ்பூன்

பன்னீர் ரோஜா இதழ்கள் - சிறிதளவு

செய்முறை:

கெட்டியான தயிரில் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர், 3 டீஸ்பூன் தேன் அல்லது 1 டீஸ்பூன் ஸ்டீவியா மற்றும் நன்றாக பொடியாக்கப்பட்ட பன்னீர் ரோஜா இதழ்களைச் சேர்த்து கலக்கவும். இந்த கிரீமியான இனிப்பு, பண்டிகை நாளில் சர்க்கரை நோயாளிகளின் சுவை நரம்புகளை திருப்திப்படுத்த உதவும்.

Also Read : தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்ய திட்டமா..? வித்தியாசமா இந்த பொருளை யூஸ் பண்ணி செஞ்சு பாருங்க...

4. பேரீச்சம் பழ லட்டு:

இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சம்பழத்தில் இனிப்பு சுவையும் அதிகமாக இருப்பதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ட்ரீட்டாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

பேரீச்சம் பழம் - 1 கப் (கொட்டை நீக்கியது)

தேங்காய் துருவல் - 1/2 கப்

பாதாம் - 1/2 கப்

வேர்க்கடலை - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து பேரீச்சம் பழத்தை நன்றாக அரைத்துக்கொள்ளவும். கொட்டியாக அரைக்கப்பட்ட பேரீச்சம்பழ பேஸ்ட் உடன் வறுக்கப்பட்ட தேங்காய் துருவல், வேர்க்கடலை ஆகியவற்றை கலந்து, கைகளில் நெய் தடவி உருண்டைகளாக உருட்டி பரிமாறவும்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Deepavali, Diabetes, Diwali, Sweet recipes