கோதுமை அவல் vs மியூசிலி : எடையை குறைக்க சிறந்தது எது?

கோதுமை அவல் vs மியூசிலி : எடையை குறைக்க சிறந்தது எது?

Wheat

இவை இரண்டையும் ஒப்பிடும்போது, கோதுமை அவலில் அதிக நார்ச்சத்துகளும், குறைவான சர்க்கரையும் உள்ளது. மியூஸ்லியில் அதிகமான வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் நிரம்பியுள்ளன.

  • Share this:
காலை உணவை ஊட்டசத்து மிக்கதாக எடுத்துக்கொண்டால், அன்றைய நாளில் புத்துணர்ச்சியாக இருக்கலாம். ஆனால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் காலை உணவை எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். அதிக உணவை எடுத்துக்கொள்ளலாமல், குறைவான கலோரிகள் உடைய உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அந்தவகையில் பலரும் கோதுமை அவல் அல்லது மியூசிலி அல்லது ஓட்ஸ் உணவுகளை குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொள்கிறார்கள். உண்மையிலேயே இது சிறந்த தேர்வாகும். இந்த உணவுகளை தயாரிப்பதற்கும் நீண்ட நேரம் ஆகாது என்பது கூடுதல் சிறப்பு.

கோதுமை அவல் மற்றும் மியூசிலியில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளும், வைட்டமின்களும் நிரம்ப இருக்கின்றன. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் இதனை எடுத்துக்கொள்வது நல்லது. ஆனால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கும். இவை இரண்டில் எந்த உணவில் குறைவான கலோரிகள் இருக்கும் என யோசிப்பார்கள்.

கோதுமை அவல் vs மியூசிலி

முழு கோதுமையில இருந்து கோதுமை அவல் தயாரிக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. அவை உடலை புத்துணர்ச்சியாக வைத்திருப்பதுடன், உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதை ஊக்குவிக்கின்றன. அதுமட்டுமல்லாது, கோதுமை அவலை சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக்கி, செரிமான அமைப்பை சுத்தமாக வைத்திருக்கிறது. தாதுக்களும், வைட்டமின்களும் நிரம்பிய உணவுகள், எடை குறைக்க உதவுவதால், அவர்களுக்கு கோதுமை அவல் சிறந்த தேர்வு.

கோதுமை அவலுடன் ஒப்பிடுகையில் மியூஸ்லி முழு தானியங்களால் தயாரிக்கப்படுகிறது. அதாவது, ஓட்ஸ், உலர்ந்த பழங்கள், கோதுமை அவல் மற்றும் பழங்களின் உலர் விதைகள் அல்லது நட்ஸ் மூலம் உருவாக்கப்படுகிறது. எளிதாக உருவாக்கிவிடக் கூடிய ஊட்டசத்து மிக்க உணவு என்பதால் பலரும் இதனை காலை உணவாக பரிந்துரைக்கின்றனர். ரத்தத்தை சீராக்குவதுடன், புரதங்கள் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் அதிகளவில் உள்ளன. நாம் வழக்கமாக எடுத்துகொள்ளும் உணவுகளுடன் ஒப்பிடுகையில் இது சிறந்த உணவு.

கோதுமை அவல்

இரண்டும் சிறந்த உணவாக இருந்தாலும், ஊட்டச்சத்துகளின் அளவில் கோதுமை அவலுக்கு, மியூஸ்லிக்கும் இடையே முக்கிய வேறுபாடுகள் உள்ளன. கோதுமை அவலில் சர்க்கரை மற்றும் உப்பு அகியவை சேர்க்கப்பட்டிருக்காது. இயல்பாக நார்ச்சத்து அதிகமாக இருக்கும். 50 கிராம் கோதுமை அவலை எடுத்துக்கொண்டால், அவற்றில் எனர்ஜி 8 விழுக்காடு இருக்கும். கொழுப்பு 1 கிராம், சர்க்கரை 0.3 கிராம், உப்பு: 0.02 கிராம், கார்போஹைட்ரேட்டுகள்: 20 கிராம், நார்ச்சத்து: 15 கிராம், கலோரிகள்: 70, புரதம்: 6 கிராம், இரும்பு: 4 கிராம் இருக்கும். மேலும், துத்தநாகம், வைட்டமின் பி 12, பொட்டாசியம், தியாமின், பாஸ்பரஸ் போன்ற ஏராளமான தாதுக்களும் நிரம்பியுள்ளன.

மியூஸ்லி

உலர் பழங்கள், விதைகள் மற்றும் கொட்டைகளால் உருவாக்கப்படும் மியூஸ்லியிலும் ஊட்டசத்துக்கள் அதிகளவில் உள்ளன. 50 கிராம் மியூஸ்லியை எடுத்துகொண்டால், எனர்ஜி 9% இருக்கும். கொழுப்பு: 2.9 கிராம், சர்க்கரைகள்: 6.5 கிராம், உப்பு: 0.08 கிராம், கார்போஹைட்ரேட்டுகள்: 30 கிராம், நார்: 10 கிராம், கலோரிகள்: 90, புரதம்: 5 கிராம், இரும்பு: 2 கிராம் இருக்கும்.

இவை இரண்டையும் ஒப்பிடும்போது, கோதுமை அவலில் அதிக நார்ச்சத்துகளும், குறைவான சர்க்கரையும் உள்ளது. மியூஸ்லியில் அதிகமான வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் நிரம்பியுள்ளன. நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் சிறந்த வைட்டமின்களும், ஊட்டச்சத்தும் நிறைந்த உணவு எடுத்துக்கொள்வது நல்லது. அந்தவகையில் மியூஸ்லியை தேர்தெடுக்கலாம். அதேநேரத்தில், மியூஸ்லி அல்லது கோதுமை அவலுடன் எடுக்கும் பாலை கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும். அதில் இருக்கும் கொழுப்பும் உங்கள் டையட்டை பாதிக்கும். சர்க்கரையை மேலும் சேர்க்காமல் பாலில் கலந்து மியூஸ்லியை குடிப்பது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு சிறந்தது.
Published by:Ram Sankar
First published: