• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஆன்லைன் அட்வைஸ் கேட்டு சோயா சாஸ் குடித்த பெண் மூளைச்சாவால் பலி!

ஆன்லைன் அட்வைஸ் கேட்டு சோயா சாஸ் குடித்த பெண் மூளைச்சாவால் பலி!

முறையில்லாத டயட் வழிமுறைகளைப் பின்பற்றி அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் மூளைச்சாவால் மரணமடைந்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பெருங்குடல் சுத்தமாக சோயா சாஸ் குடிக்க வேண்டும் என ஆன்லைன் மூலம் தெரிந்ததைச் செய்த பெண் ஒருவர் மூளைச்சாவு அடைந்து பலியாகி உள்ளார்.

ஆன்லைனில் பலரது வாழ்க்கையைப் பின் தொடரும் நாம் நமக்கு சரியானவற்றை பின் தொடர்வதில் தவறு செய்துவிடுகிறோம் என்றே மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் ஆன்லைனில் பிரபலமாகிய டயட் முறைகளை எல்லாம் கடைபிடித்து வந்துள்ளார். அதில், பெருங்குடல் சுத்தமாக சோயா சாஸ் குடிக்க வேண்டும் எனத் தெரிந்து கொண்டார்.

2 மணி நேரத்தில் 1 லிட்டர் சோயா சாஸ் குடித்துள்ளார் அப்பெண். இதனால் மூளைச்சாவு அடைந்து அப்பெண் பலியாகி உள்ளார். இவரது ரத்தத்தில் சோயா சாஸ் உடன் 200 கிராம் உப்பும் கலந்துள்ளது.

உடலில் ஏறிய சோடியம் அளவை மருத்துவர்கள் குறைக்க முயன்றும் முடியாததால் மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பும் ஆன்லைனில் பார்த்து மீன் மற்றும் பிரெட் மட்டுமே கொண்ட டயட்டை மேற்கொண்டுள்ளார். இதனால் அப்பெண் மூன்றே வாரத்தில் 11 கிலோ எடை குறைந்துள்ளார்.

அதற்கும் முன்னர் மனச்சிதைவு நோய்க்காக மருத்துவ ஆலோசனை எடுத்துவந்த அப்பெண் டயட் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசிக்காமல் முயற்சித்து இன்று பலியாகியுள்ளார்.

மேலும் பார்க்க: மாடுகள் கட்டி ஏர் உழுதால் அதிக அறுவடை - நீலகிரி விவசாயிகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: