ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஆலியா பட் கர்ப்ப காலத்தின் போது பின்பற்றிய டயட்.!

ஆலியா பட் கர்ப்ப காலத்தின் போது பின்பற்றிய டயட்.!

ஆலியா பட்டின் கர்ப்பகால டயட்

ஆலியா பட்டின் கர்ப்பகால டயட்

உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் புதினா மற்றும் வெள்ளரி பானம் போன்ற டிடாக்ஸ் பானங்களை உட்கொள்வதாக ஆலியா பட் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாலிவுட் காதல் ஜோடியான ரன்பீர் மற்றும் ஆலியா இருவரும் ரசிகர்களுக்கிடையே மிகவும் பிரபலமான காதலர்களாக வலம் வந்தனர். அந்த காலக்கட்டத்தில் இவர்களைப் பற்றி செய்திகள் தான் ஹாட் டாப்பிக்காக இருந்தது. நீண்ட நாள்களாகக் காதலித்து வந்த இவர்கள், தாங்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகத் தெரிவித்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வந்தனர். இச்சூழலில் தான் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களின் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களிலேயே தங்களின் குடும்பத்திற்கு புதிய வரவு மற்றும் எங்களின் முதல் குழந்தைக்காக காத்திருக்கிறோம் என்ற தகவல் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இந்நிலையில் தான் ரன்பீர் மற்றும் ஆலியா ஜோடிக்கு நேற்று அதவாது நவம்பர் 6 ஆம் தேதி மும்மைபயில் உள்ள எச்என் ரிலையன்ஸ் பவுண்டேசன் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை ரசிகர்களுக்கு இன்ஸ்டா வாயிலாக தெரிவித்த ஆலியா, “எங்களின் வாழ்க்கையின் முக்கியமான செய்தி என்றால் இது தான் எனவும், தற்போது எங்களின் குழந்தை எங்கள் கைகளில், அதுவும் அழகான பெண் குழந்தை என்பதால் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்ட பெற்றோர்களாக மாறி இருக்கிறோம்“ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை இன்ஸ்டாவில் பார்த்த ரசிகர்கள், வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். தாயும் சேயும் நலமுடன் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசிர்வதிக்கின்றனர்.

இப்படியான சூழலில் , தான் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருந்ததற்கு இந்த டயட் முறை தனக்கு மிகவும் உதவியாக இருந்தது என சோசியல் மீடியா வாயிலாக தெரிவித்துள்ளார். இதோ என்ன? என்பது குறித்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.. பொதுவாக ஆலியா பட் சைவ உணவு பிரியர் என்பதால், தன்னுடைய வளைகாப்பு நிகழ்ச்சிகளில் கூட செய்யப்பட்ட அனைத்து உணவுகளையும் சைவமாக இருந்ததாகக் கூறியுள்ளார்.

ஆரோக்கிய உணவுகள்:

கர்ப்பத்திற்கு முன்பிருந்தே எப்போதும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைத் தான் சாப்பிடுவேன் எனவும் எக்காரணம் கொண்டு இதை மாற்றிக் கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார். சாப்பிடும் உணவில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், நியூட்ரிசன்கள், தாதுக்கள், புரதம் போன்றவை உள்ளதா? என்பதை நினைவில் வைத்துக் கொள்வேன் என ஆலியா தெரிவித்துள்ளார். எவ்வளவு வேலை இருந்தாலும் தனக்கான உணவை ஒருபோதும் தவிர்ப்பதில்லை எனவும், ஒரு வேளை சாப்பிடும் நேரத்தில் வேலை இருந்தால் உணவை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

சத்துள்ள டிடாக்ஸ் பானங்கள்:

இன்றைக்கு மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால், நமது உடலில் பல வகையான நச்சுகள் சேரத் தொடங்குகின்றன. எனவே உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் புதினா மற்றும் வெள்ளரி பானம் போன்ற டிடாக்ஸ் பானங்களை உட்கொள்வதாகக் கூறியுள்ளார்.

கர்ப்ப காலத்தில் ஒரு நாளைக்கு 4 முதல் 9 முறையாவது கொஞ்சம் கொஞ்சமாக உணவை எடுத்துக் கொள்வதாகவும், பீட்ரூட் சாலட்டை அதிகளவில் எடுத்துக் கொள்வேன் என்கிறார். பீட்ரூட், தயிர், உப்பு, மிளகு, கறிவேப்பிலை சேர்த்து செய்யப்படும் இந்த சாலட் உடலுக்கு ஆரோக்கியத்தையும் குழந்தைக்கு நல்ல வளர்ச்சியைத் தரும் என்கிறார். இதுபோன்ற எளிமையான உணவுமுறைகளைப் பின்பற்றி வந்தாலே உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்கிறார் ஆலியா பட். மேலும் கர்ப்ப காலத்தில் மிகவும் ஆசையாக இருந்தால் ஏதாவது ஒரு நாள் பீட்சா மட்டும் சாப்பிடுவேன் என்று மகிழ்வுடன் பகிர்ந்துள்ளார்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Alia Bhatt, Diet tips, Pregnancy diet