ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பாலிஃபெனால்ஸால் நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா.! இனியும் இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க.?

பாலிஃபெனால்ஸால் நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா.! இனியும் இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க.?

பாலிஃபெனால்ஸ்

பாலிஃபெனால்ஸ்

பாலிஃபினால்கள் பல தாவர அடிப்படையிலான உணவுகளில் காணப்படுவதாக கூறி இருக்கும் நிபுணர் இவை செரிமானம், மூளை செயல்பாடு மற்றும் ரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துவதோடு ரத்த உறைவு, இதய நோய் மற்றும் சில வகை கேன்சர்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதில் உணவுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியமான உணவு என்பது நம்முடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியதாக இருக்க வேண்டும். நம்முடைய டயட்டில் புரோட்டீன், ஃபைபர், வைட்டமின்ஸ், மினரல்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகளை சீராக சேர்த்து கொள்ள வேண்டும். இந்த பட்டியலில் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் பாலிஃபினால் (polyphenol) முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். செரிமானத்தை அதிகரிக்க, வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்த, இதய ஆரோக்கியத்தை பராமரிக்க என பல நன்மைகளை அளிக்கிறது. பாலிஃபினால்களின் ஆரோக்கிய விளைவுகள் அதை நாம் எடுத்து கொள்ளும் அளவை பொறுத்தது.

பிரபல ஊட்டச்சத்து நிபுணரான லோவ்னித் பத்ரா, பாலிஃபினால்களின் நன்மைகளை பற்றியும், குடல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய உதவும் பாலிஃபினால் நிறைந்த உணவுகள் பற்றியும் தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில் ஷேர் செய்து உள்ளார். நன்மை பயக்கும் சேர்மமான பாலிஃபினால்கள் பல தாவர அடிப்படையிலான உணவுகளில் காணப்படுவதாக கூறி இருக்கும் நிபுணர் இவை செரிமானம், மூளை செயல்பாடு மற்றும் ரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துவதோடு ரத்த உறைவு, இதய நோய் மற்றும் சில வகை கேன்சர்களில் இருந்தும் பாதுகாக்கும் என குறிப்பிட்டுள்ளார். நிபுணரின் கூற்றுப்படி உங்கள் டயட்டில் பாலிஃபினால்ஸ் நிறைந்திருப்பதை உறுதி செய்ய உதவும் சில ஆரோக்கியமான உணவுகள் இங்கே:

ஆப்பிள்:

பல ஆரோக்கிய ஊட்டச்சத்துக்களுடன் ஆப்பிள்கள் பாலிஃபினால்களின் சிறந்த மூலமாகும் என்று கூறியுள்ள நிபுணர், உண்மையில் ஆப்பிளில் இருக்கும் அனைத்து வகை பாலிஃபினால்கள் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்டவை சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் பூஸ்ட்டாக உள்ளன. பாலிஃபினால்ஸ்களின் அனைத்து நன்மைகளையும் பெற ஃபிளாவனாய்ட்ஸ்கள் அதிகம் இருக்கும் ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது முக்கியம்.

வெங்காயம்:

வெங்காயத்தில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குர்செடின், சல்ஃபர் காம்பவுன்ட்ஸ், ஆல்கஹால் ப்ரோபில் டை-சல்ஃபைட் மற்றும் ப்ரீபயாடிக் காம்பவுன்ட்ஸ் போன்ற பாலிஃபினால் கலவைகள் அதிகம் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார் லோவ்னித் பத்ரா.
 
View this post on Instagram

 

A post shared by Lovneet Batra (@lovneetb)பாதாம்:

குடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு ஆரோக்கியம், தோல் மற்றும் முடி மற்றும் பல ஆரோக்கியத்திற்கு உதவும் பல சிறந்த ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக பாதாம் உள்ளதாக லோவ்னித் குறிப்பிட்டுள்ளார். சரும ஆரோக்கியத்திற்காக உதவும் பிரத்யேக பாலிஃபினால்கள் பாதாமில் நிறைந்துள்ளன.

ப்ரோக்கோலி:

பயோஆக்டிவ் காம்பவுன்ட்ஸ்கள் அதிகம் இருப்பதன் காரணமாக ப்ரோக்கோலி ஒரு ஆற்றல் நிறைந்த உணவாக இருக்கிறது. ப்ரோக்கோலியின் ஹை ஆன்டிஆக்ஸிடன்ட் ஆக்டிவிட்டிக்கு பாலிஃபினால்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன.

Also Read : நன்மைகள் தரும் பாலிஃபெனான்ஸ்.. அதென்ன பாலிஃபெனால்ஸ்? எந்தெந்த உணவில் கிடைக்கிறது.?

மஞ்சள்:

ஆன்டிஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நச்சுகளை வெளியேற்றும் மற்றும் உடலில் உள்ள வீக்கத்தை எதிர்த்துப் போராடும் பிற சேர்மங்கள் மஞ்சளில் நிறைந்துள்ளன. இதில் அடங்கி இருக்கும் குர்குமின் என்பது ஃபிளாவனாய்டு பாலிஃபினால் ஆகும். வலுவான எலும்பு, தசை சுருக்கம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் மஞ்சளில் உள்ள பாலிஃபினால்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

First published:

Tags: Health tips, Healthy Food