விநாயகர் சதுர்த்திக்கு இந்த டயட் கொழுக்கட்டையை செஞ்சுபாருங்க..

ராகி கொழுக்கட்டை

இந்த டயட் கொழுக்கட்டை அனைவருக்கும் ஏற்ற உணவு. சுகர் இருப்பவர்கள் வெல்லத்திர்க்கு பதில் ஈக்குவல் பவுடர் செர்த்துக் கொள்ளலம்...

  • Share this:
அதிகப்படியான தொப்பையால் அவதிப்படுகிறவர்கள் தொப்பை முழுக்க கரைந்து, தட்டையான வயிறைப் பெற வேண்டுமென்றால், தினமும் காலையில் ராகி உருண்டையைச் சாப்பிட வேண்டும். அப்படி காலையில் ராகி உருண்டை சாப்பிடுவதனால், அதில் உள்ள அதிக அளவிலான அமினோ அமிலங்கள், ட்ரிப்ஃபன் மற்றும் அடிக்கடி பசி எடுப்பதைத் தடுக்கும். அத்தகைய இந்த ராகியில் விநாயகர் சதுர்த்திக்கு டயட் கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 1 கப்

பாசிப்பருப்பு - 1 கையளவு

துருவிய தேங்காய் - 1/4 கப்

பொடித்த வெல்லம் - 3/4 கப்

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

ராகி


செய்முறை: முதலில் பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு 3 நிமிடம் வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் பாசிப்பருப்பைப் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து நீரை வடித்து தனியாக பருப்பை எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ராகி மாவைப் போட்டு 2 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க... விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... பிள்ளையாருக்குப் பிடித்த பூரணம் கொழுக்கட்டை ரெசிபி..

அத்துடன் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 1/2 கப் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், இறக்கி குளிர வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு, பாசிப்பருப்பு, தேங்காய், வெல்லத் தண்ணீர், ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் தெளித்து, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க... குழந்தைகளுக்கு பிடித்த பால் கொழுக்கட்டை... இதோ ரெசிபி...

அடுத்து இட்லி தட்டில் பிசைந்து வைத்துள்ள மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இட்லி பாத்திரத்தை மூடி வைத்து 10-15 நிமிடம் வேக வைத்து இறக்கினால், ராகி கொழுக்கட்டை ரெடி.. இதை டயட் இருப்பவர்களும் சர்க்கரை நோயாளிகளும் உண்ணலாம்...

மேலும் படிக்க... விநாயகருக்கு பிடித்தமான பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?
Published by:Vaijayanthi S
First published: