ஹிந்தி திரைப்பட பிரபலங்களான அலியா பட் மற்றும் ரண்பீர் கபூர் ஜோடியினருக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளது. ஒரு ரசிகையாக இவர்களுக்கு வாழ்த்து சொல்லும் அதேவேளையில், பிரசவிக்கும் புதிய தாய்மார்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக பிரசவ கால உடல் பலவீனத்தில் இருந்து உடல் மீண்டு வர வேண்டும். இதற்கு சத்தான உணவு மற்றும் தகுந்த ஓய்வு ஆகியவை அவசியம். ஆனால், செல்லக் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தாய்மார்களுக்கு இருப்பதால் தொடர்ச்சியான ஓய்வு குறித்து நினைத்துகூட பார்க்க முடியாது. ஏதோ குழந்தை தூங்கும் சமயத்தில், நாமும் கொஞ்சம் தூங்கிக் கொள்ள வேண்டியதுதான்.
அதேசமயம், உங்கள் செல்லக் குழந்தைக்கு புரதம், கால்சியம், இரும்புச்சத்து, மினரல்கள் என ஊட்டச்சத்துகள் அவசியம். அதற்காக, இந்த சத்து நிறைந்த உணவுகளை பச்சிளம் குழந்தை நேரடியாக சாப்பிட முடியுமா? இவற்றை குழந்தைக்கு கொண்டு சேர்க்கும் வலிமையான சப்ளையர் தாய்ப்பால் மட்டுமே.நீங்கள் சாப்பிடக் கூடிய உணவுகள் உங்களுக்கு மட்டுமல்லாமல், குழந்தைக்கும் தாய்ப்பாலாக சென்று சேருகிறது என்பதை மறக்கக் கூடாது. அதேசமயம், தாய்ப்பால் சுரப்பை தூண்டக் கூடிய உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகள்
இறைச்சி, பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்கள், மீன், முட்டை, பீன்ஸ், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றை தாய்மார்கள் அதிகம் உட்கொள்ள வேண்டும். இவை உடலுக்கு தேவையான புரதச்சத்தை வழங்குகின்றன. மற்றும் தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கின்றன.
Also Read : பிறந்த குழந்தையை பராமரிக்க புதிய அம்மாக்களுக்கான கைட்லைன்...
வளரும் குழந்தையின் இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் போன்ற தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நீங்கள் உலர் பழங்கள் சாப்பிட வேண்டும். காய்கறிகளை மிகுதியாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மஞ்சள் மற்றும் அடர் பச்சை நிற காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். கேழ்வரகு, ஓட்ஸ் போன்ற முழு தானிய உணவுகள், கோதுமை பிரட் போன்றவற்றை சாப்பிடலாம்.
சூப்பர் ஃபுட்ஸ்
ப்ளூபெர்ரி, சிவப்பு அரிசி, ஆரஞ்சு, சால்மன் மீன், பாலக்கீரை, பூண்டு போன்ற உணவுகள் தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கும். எப்போதும் காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
புதிய தாய்மார்கள் சத்தாக சாப்பிட வேண்டிய அதேவேளையில், ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பது மிக, மிக முக்கியமானதாகும். குறிப்பாக அசைவ உணவுகளில் மசாலா மற்றும் காரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.