• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Weight Loss | வெயிட் லாஸ் பண்ண திட்டமா? அப்போ டயட்டில இந்த உணவுகள தவறாம சேத்துக்கோங்க..!

Weight Loss | வெயிட் லாஸ் பண்ண திட்டமா? அப்போ டயட்டில இந்த உணவுகள தவறாம சேத்துக்கோங்க..!

ஊட்டச்சத்து நிபுணர்கள் பெரும்பாலும் ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக நிறைய தானியங்களை சாப்பிடுவதை பரிந்துரைக்கின்றனர்.

  • Share this:
பெரும்பாலான மக்களின் இன்றைய முக்கிய பிரச்சனை உடல் பருமன். ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். உடல் எடையை குறைக்க உணவு பட்டியலில் இருந்து நாம் முதலில் அகற்றுவது கார்ப்ஸ் தான். ஆனால் மிதமான அளவில் கார்ப்ஸ் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

நமது உடலுக்கு தேவையான முதன்மை ஆகாரங்களில் ஒன்று கார்போஹைட்ரேட்டுகள். கார்போஹைட்ரேட்டுகள் மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவுவது மட்டுமன்றி சிறுநீரகங்கள், தசைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் துணை புரிகிறது. நீங்கள் கார்ப்ஸ் உணவுகளை போதுமான அளவு எடுத்துக்கொள்ளாவிட்டால் தலைவலி, சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

சர்க்கரைவள்ளி கிழங்கு:

சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆண்டிஆஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. பொதுவாக கிழங்கில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. இதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம். மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து, ஃபைபர், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவதால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது மற்றும் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்.

பருப்பு வகைகள்:

பருப்பு வகைகளில் கார்போஹைட்ரேட்டுகளில் ஏராளமாக உள்ளன, மேலும் புரதம் மற்றும் நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது. உங்கள் அன்றாட உணவில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகள் இருப்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இது உடலில் உள்ள செல்கள் சேதமடைவதை தடுத்து நோய்களுக்கு எதிராக போராடுகிறது.

பால் பொருட்கள்:

240 மில்லி பாலில் 12 முதல் 13 கிராம் வரை கார்போஹைட்ரேட் உள்ளது. பாலில் இருந்து பெறப்படும் யோகர்ட், தயிர், நெய், சீஸ், வெண்ணெய், பால் ஸ்வீட்க்கள் போன்ற பால் பொருட்களில் ஆரோக்கியமான கார்ப்ஸில் நிறைந்துள்ளன. இவற்றில் லேக்டோஸும் உள்ளது, இது வலிமையான தசைகளை உருவாக்குவதற்கும், ஆற்றலை வழங்குவதற்கும் சிறந்தவை. மேலும் இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. இது எலும்புகள் ஆரோக்கியத்தை வலுப்படுத்தி, சரும பளபளப்பைக் கொடுக்கின்றது.

Must Read | “சுடுதண்ணீர் முதல் சோப்பு வரை…” – நீங்கள் செய்யக்கூடாத 5 குளியல் தவறுகள்!

பழங்கள்:

ஆப்பிள்கள், வாழைப்பழம், மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி போன்ற பழங்களில் ஆரோக்கியமான கார்ப்ஸ் நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது. பழங்களில் ஆரோக்கியமான கார்ப்ஸ் நிறைந்துள்ளது, எனவே உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் தங்கள் அன்றாட உணவில் பழங்களை சேர்க்க வேண்டும். இது பசியை கட்டுப்படுத்தி அதிக உணவு சாப்பிடாமல் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

முழு தானியங்கள்:

ஊட்டச்சத்து நிபுணர்கள் பெரும்பாலும் ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக நிறைய தானியங்களை சாப்பிடுவதை பரிந்துரைக்கின்றனர். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் முழு தானியங்களை எடுத்து கொள்ளலாம். பிரவுன் அரிசி மற்றும் ஓட்மீல் முழு தானியங்களுக்கான எடுத்துக்காட்டுகளாகும். முழு தானியங்கள் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைவிட அதிக வைட்டமின் E, B மற்றும் ஃபோலிக் அமிலம், மக்னீசியம், துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற முக்கியமான கனிமங்களை கொண்டுள்ளது. பார்லி, பிரவுன் ரைஸ், தினை, கோதுமை, சோளம் போன்ற முழு தானியங்கள் கார்போஹைட்ரேட்டுகளின் மூலமாகும். எனவே தினமும் இவற்றில் ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: