• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • முழு தானியங்களை சாப்பிட்டால் இந்த நோய்களை தவிர்க்கலாமா? தெரிந்துக் கொள்ளுங்கள்..

முழு தானியங்களை சாப்பிட்டால் இந்த நோய்களை தவிர்க்கலாமா? தெரிந்துக் கொள்ளுங்கள்..

காட்சிப் படம்

காட்சிப் படம்

நாள்தோறும் முழு தானியங்களின் உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

  • Share this:
எண்ணெய் உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனி மோகத்தால் ஆட்கொண்டிருந்த மக்கள் மெல்ல, உடல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவும் தானியங்களை நோக்கி திரும்புகின்றனர். அன்றாட டையட்டில் தானியங்களை அதிகம் சேர்த்துக்கொள்வதை இப்போதுஅதிகம் பார்க்க முடிகிறது. கொரோனாவுக்குப் பிறகு உணவுக்கு மக்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து, நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. சீரான ரத்த ஓட்டத்துக்கும் முழு தானியங்களை உணவாக எடுத்துக்கொள்வது அவசியம். அந்தவகையில், நாள்தோறும் முழு தானியங்களின் உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

முழு தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

* முழு தானியங்களின் அதிகளவிலான நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிரம்பியுள்ளன. தாதுக்கள், புரதம் உள்ளிட்ட பல அத்தியாவசிய கொண்டிருக்கும் இதனை உணவாக எடுத்துக்கொள்ளும்போது, உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. குறிப்பாக, முழு தானியங்களின் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகளவில் உள்ளன.

* ஏற்கனவே கூறியதுபோல், தானியங்களை உணவில் சேர்த்துகொள்வதன் மூலம் இதயநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். பல்வேறு நோய்களுக்கு மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இதயத்தை பாதுகாப்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டியது மிகமிக அவசியம் என்பதால், மற்ற உணவுகளை தவிர்த்து தானிய உணவுகளை அதிகளவில் சேர்த்துக்கொள்வதில் தவறில்லை.

* இதய பாதிப்பு ஏற்படாதபோது, அதனுடன் தொடர்புடைய பக்கவாதம் ஏற்பட வாய்ப்பில்லை. உடல் எடை கூடுவது தானிய உணவுகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு நோய் ஏற்படும் போது எடை அதிகரிக்கும் என்பதால், முழு தானியங்களை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள். இந்த உணவுகளை சாப்பிடும்போது டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைந்த அளவில் மட்டுமே உள்ளன.



* முழு தானியங்களில் நார்ச்சத்துக்கள் நிரம்பியிருப்பதால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படாது. உணவுகள் எளிதாக ஜீரணிக்கும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். குடல் இயக்கம் சீராக இருக்கும்.

* தானியங்களை உணவாக எடுத்துக்கொள்ளும்போது புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம். குறிப்பாக, பெருங்குடல் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை தவிர்க்க வேண்டும் என்றால் முழு தானியங்களை அன்றாட உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சரியான உணவு முறையை கடைபிடிக்கும்போது இறப்பு அபாயமும் குறைகிறது.

Also Read : உண்ணாவிரதம் இருப்பது உடல் எடையை குறைக்க உதவுமா..? தெரிந்துகொள்ளுங்கள்..



தவிர்க்க வேண்டிய உணவுகள்:

எண்ணெயில் பொறிக்கப்படும் உணவுகள் உடல் நலத்துக்கு தீங்கானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ருசிக்காக சாப்பிடாமல், ஆரோக்கியமான உணவை ருசியாக சமைத்து சாப்பிடுங்கள். காய்கறி, கீரை, பழங்கள் ஆகியவற்றை தினம்தோறும் சாப்பிடும்போது உடலான சீரான இயக்கத்தை கொண்டிருக்கும். மன அழுத்தம் நீங்கி, மனம் அமைதியாக இருக்கும். உணவுகளை சரியாக தேர்ந்தெடுத்து சாப்பிடும்போது, உங்களின் இலக்குகளில் சரியாக கவனத்தை செலுத்துவீர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: