முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பாசிப்பருப்பில் கூட தோசை வரும் தெரியுமா? கட்டாயம் ட்ரை பண்ணுங்க!

பாசிப்பருப்பில் கூட தோசை வரும் தெரியுமா? கட்டாயம் ட்ரை பண்ணுங்க!

பாசிப்பருப்பு தோசை

பாசிப்பருப்பு தோசை

அவசரத்திற்கு மார்னிக் பிரேக் ஃபாஸ்டுக்கு இந்த தோசையை கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க

  • Last Updated :

ரவா தோசை, மசாலா தோசை, என பல வகையுண்டு. இதை அடிக்கடி வீட்டில் செய்தும் இருப்பீர்கள். ஆனால் பாசிப்பருப்பில் தோசை செய்து இருக்கீங்களா? மொறு மொறு ருசியில் அரிசி - உளுந்து சேர்த்து அரைத்த மாவு தோசையை விட டேஸ்டில் சூப்பராக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள். அவசரத்திற்கு மார்னிக் பிரேக் ஃபாஸ்டுக்கு இந்த தோசையை கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க. இதற்கு சைடிஷ்ஷாக புதினா சட்னி,கார சட்னி, தேங்காய் சட்னி, பருப்பு பொடி எல்லாமே அட்டகாசமாக இருக்கும்.

இந்த ரெசிபி வீடியோ ’ஷா யம்மி டைரீஸ்’ என்ற குக்கிங் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. வித்யாசமான பிரேக் ஃபாஸ்ட் ரெசிபிக்கள் சமீபகாலமாக ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அந்த வரிசையில் இந்த எல்தியான பாசிப்பருப்பு தோசையும் சேரும். இப்போது இந்த ரெசிபியின் செய்முறையை பார்க்கலாம்.

இதையும் படிங்க.. 80-களில் பிகினியில் கலக்கிய மாதவி!

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு, அரிசி மாவு, உப்பு, எண்ணெய், பேக்கிங் சோடா

செய்முறை:

முதலில் தேவையான அளவு பாசிப்பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அந்த பருப்புடன் அரிசி மாவு சேர்த்து மிக்ஸியில் தோசை மாவு பக்குவத்திற்கு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க.. லாரி மோதியதில் குழந்தையோடு பெண் காவலர் உயிரிழந்த பரிதாபம்

அரைத்த மாவில் உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இப்போது தவாவில் எண்ணெய் ஊற்றி தோசை தேய்த்து சுட்டு எடுத்தால் சுவையான பாசிப்பருப்பு தோசை தயார்.

' isDesktop="true" id="731118" youtubeid="ovL2zDAUa9M" category="food">

இந்த தோசை பாசிப்பருப்பில் செய்வதால், குளிர் காலத்தில் சாப்பிட வேண்டாம். குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். இரவு நேரத்தில் எடுத்துக் கொண்டால் சீக்கிரமாக சாப்பிட வேண்டும், பாசிப்பருப்பு என்பதால் சீக்கிரத்தில் ஜீரணம் ஆகாது. வீட்டில் தோசை மாவு இல்லாத சமயத்தில் அவசரத்திற்கு இந்த டிபனை கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்கள். வித்யாசமான சுவையில் இருக்கும்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Breakfast, Dosa, Food recipes