• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Diwali Snacks: சுவையான சுழியம் செய்வது எப்படி?

Diwali Snacks: சுவையான சுழியம் செய்வது எப்படி?

நம் எல்லோருக்குமே பிடித்த ஒரு இனிப்பு வகை என்றால், அதில் சுசியம் கண்டிப்பாக அடங்கும். நம் பாரம்பரிய உணவு வகையில் இதுவும் ஒன்று. இதனை எப்படி செய்வது என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க....

  • Share this:
கொரோனாவால் வீட்டிலேயே இருக்கும் குழந்தைகளுக்கு இந்த தீபாவளிக்கு சுவையான இந்த ஸ்வீட் ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள், விரும்பி சாப்பிடுவார்கள். இன்று சுசியம் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க....

தேவையான பொருட்கள்

மைதா - 1 கப்

தண்ணீர் - தேவையான அளவு

வெல்லம் / பனை வெல்லம் - 1 கப்

கடலைபருப்பு - 1 கப்

துருவிய தேங்காய் - 1 கப்

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

நெய் - 1 தேக்கரண்டி



செய்முறை

கடலைபருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். ஒரு கடாயில் வெல்லம் எடுத்து தண்ணீர் விட்டு கரைய விடவும். வெல்லம் கரைந்ததும் அதை வடிக்கட்டி தனியாக எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் வேக வைத்த கடலை பருப்பு, வடிகட்டிய வெல்லப் பாகு, துருவிய தேங்காய், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும். அது கெட்டியாக வரும்போது ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி வைக்கவும். பின்னர் அவற்றை சிறு உருண்டையாக உருட்டி வைக்கவும்.

ஒரு கிண்ணத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும். மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்த உருண்டையை மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான சுழியம் உருண்டை ரெடி...

மேலும் படிக்க... இனி தினமும் உங்கள் முதல் உணவு இப்படி இருக்கட்டும்...

தக்காளி மசாலா பூரி ரெசிபி...   

ரவா லட்டு பத்து நாள் ஆனாலும் டேஸ்ட் மாறமல் இருக்க இதை செய்யுங்கள்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: