ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சுவையான ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்... இதோ ரெசிபி!

சுவையான ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்... இதோ ரெசிபி!

சாம்பார் சாதம்

சாம்பார் சாதம்

குழந்தைகள் பள்ளியில் மதியம் சாப்பிட அருமையான உணவு சாம்பார் சாதம். இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சாம்பார் சாதம் என்றாலே பசி எடுக்க ஆரம்பிக்கும். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான மத்திய உணவு சாம்பார் சாதம். அதனை எளிமையாக வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

அரிசி - 3/4 கப்

துவரம் பருப்பு - 1/2 கப்

தண்ணீர் - 4 கப்

காய்கறிகள் - 1 கப்

(கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், முருங்கை)

புளி கரைசல் - 1/4 கப்

சாம்பார் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

பூண்டு - 10

நெய் - 1 தேவையான அளவு

பச்சைமிளகாய் - 5

எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க :

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

பெருங்காய தூள் - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

Also see... ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் வைக்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க...

செய்முறை :

1. முதலில் வெங்காயம், காய்கறிகளை சிறிது துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
2. அரிசி, பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு அலசி நான்கு கப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
3. பிறகு அந்த தண்ணீரை வடித்துவிட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு, நெய், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரை வேக விடவும்.
4. பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெட்டி வைத்த காய்கறியை போட்டு அத்துடன் சாம்பார் பவுடர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
5. குக்கராக இருந்தால் காய்கறிகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசிலுக்கு வேக விடவும்.
6. காய்கறி வெந்ததும் புளி கரைசல் விட்டு நன்கு கொதித்ததும் வேக வைத்த பருப்பு மற்றும் சாதத்தை கலந்து விடவும்.
7. கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சாதத்தோடு சேர்த்து கிளறி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
8. ஈஸியாக செய்யக்கூடிய ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம் தயார்
First published:

Tags: Rice, Sambar Recipe