மதுரை ஸ்டைல் ஆட்டு மூளை வறுவல் - எப்படி செய்வது..?

மதுரை ஸ்டைலில் சூப்பரான சுவையில் ஆட்டு மூளை வறுவல் செய்ய ரெசிபி இதோ...

மதுரை ஸ்டைல் ஆட்டு மூளை வறுவல் - எப்படி செய்வது..?
மூளை வருவல்
  • Share this:
ஆட்டு மூளை ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஆண்டி ஆக்ஸிடண்ட் என பல வகையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. எனவே வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஆட்டு மூளை - 1


நல்லெண்ணெய் - 1 1/2 tbsp
சின்ன வெங்காயம் - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 tspமஞ்சள் - 1/2 tsp
மிளகு - 1 1/2 tsp
தண்ணீர் - 1/4 கிளாஏ
உப்பு - தே.அ
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவுசெய்முறை :

ஆட்டு மூளையை முதலில் ஒரு ஸ்பூன் மஞ்சளில் கழுவி வைத்துக்கொள்ளுங்கள். கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

அடுத்ததாக கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்குங்கள். பின் முழு ஆட்டு மூளையை அப்படியே போட்டு மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து பிரட்டிக்கொள்ளுங்கள்.

பீட்ரூட் கோலா உருண்டை : ருசியா இருக்கும் சாப்பிட்டுப் பாருங்க..!

பிரட்ட பிரட்ட மூளை உடைந்து உதிர்ந்துவிடும். பின் கால் கிளாஸ் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். இறுதியாக கொத்தமல்லி சேர்த்து பிரட்டிவிட்டு தட்டு போட்டு மூடி விடுங்கள்.சிறு தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் வற்றும் அளவிற்கு வெந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் மூளை வறுவல் தயார்.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading