HOME»NEWS»LIFESTYLE»food delicious chocolate cake in a frying pan recipe ghta skv

Frying Pan இருந்தா போதும்.. டேஸ்டியான சாக்லேட் கேக்கை வீட்டிலேயே செய்யலாம்..

வெறும் 15 நிமிடத்தில் கேக் செய்ய மேலும் ஒரு சூப்பர் ஐடியா இருக்கிறது. வெறும் ஃபிரையிங் பான் அதாவது நான்ஸ்டிக் தவா இருந்தாலே போதும் ஈஸியா சாக்லேட் கேக் செய்திடலாம். எப்படி செய்யலாம் என்பதை கீழே காணலாம்.

Frying Pan இருந்தா போதும்.. டேஸ்டியான சாக்லேட் கேக்கை வீட்டிலேயே செய்யலாம்..
சாக்லேட் கேக்
  • Share this:

கேக் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் சொல்லவா வேண்டும். சமீபகாலமாக வீட்டிலேயே கேக் தயாரிக்கும் ட்ரென்ட் உருவாகி வருகிறது. காரணம் கேக் செய்ய மைக்ரோவேவ் ஓவன் கட்டாயமாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. குக்கர் அல்லது பெரிய அகலமான பாத்திரம் இருந்தாலே போதும் அடுப்பிலேயே வைத்து செய்து விடலாம்.

அதிலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் பிஸ்கெட் கேக்குகள் செம ட்ரெண்டிங்கில் இருந்தது. இப்பொது நீங்கள் வெறும் 15 நிமிடத்தில் கேக் செய்ய மேலும் ஒரு சூப்பர் ஐடியா இருக்கிறது. வெறும் ஃபிரையிங் பான் அதாவது நான்ஸ்டிக் தவா இருந்தாலே போதும் ஈஸியா சாக்லேட் கேக் செய்திடலாம். எப்படி செய்யலாம் என்பதை கீழே காணலாம்.

தேவையான பொருட்கள்:



கேக் லேயர் செய்ய...

வெண்ணெய் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
முட்டை - 1
மைதா - ½ கப்
கோகோ பவுடர் - 2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - ½ தேக்கரண்டி
உப்பு - ஒரு பின்ச்

பில்லிங் செய்ய...

மஸ்கார்போன் சீஸ் - ½ கப்
தூள் சர்க்கரை - 3 டீஸ்பூன்
வெண்ணிலா எஸ்ட்ராக்ட் - ½ தேக்கரண்டி
பால் - 1.5 டீஸ்பூன்

செய்முறை :



முதலில் கேக் பேஸ் தயாரிக்க  ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் தூள் சர்க்கரை சேர்ந்து நன்றாக கலக்கவும். பிறகு அதனுடன் பால் சேர்த்து நன்றாக பீட் செய்யவேண்டும். அதன் பிறகு இந்த கலவையில் மாவு, பேக்கிங் பவுடர், உப்பு மற்றும் கோகோ பவுடர் போன்றவற்றை சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ண வேண்டும். எந்த ஒரு மாவு கட்டிகளும் சேராதபடி கலக்கிக் கொள்ள வேண்டும். மிகவும் கெட்டியாகவும் இருக்கக்கூடாது. அதேபோல், தண்ணி பதத்திலும் கேக் பேசை தயார் செய்யக்கூடாது.

இப்பொது, ஒரு நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணையை தவாவின் மேற்பரப்பில் தடவி விடுங்கள். பிறகு தயார் செய்துவைத்துள்ள கேக் பேஸ்சை சிறிதளவு ஊற்றி மாவு தவா முழுவதும் ஸ்ப்ரெட் ஆகும்படி பரப்பிவிடுங்கள். அதாவது பான் கேக் செய்வதுபோல இந்த செயல்முறையும் இருக்கும். மேலும், தவாவை மீடியம் வெப்பநிலையில் இருக்குமாறு வைக்கவேண்டும். கேக் பேஸ்சில் இருந்து குமிழிகள் வெளியாகும் வரை அதனை மூடிவைக்க வேண்டும்.



இப்பொது ஒருபுறம் வேகவைத்த பிறகு கேக் பேசை திருப்பி போட வேண்டும். சில நிமிடங்களுக்கு பிறகு கேக் பேசை தவாவில் இருந்து எடுத்து விடலாம். இது போன்று உங்களுக்கு எதனை லேயர்கள்வேண்டுமோ செய்து கொள்ளுங்கள். இதற்கடுத்ததாக கேக் லேயர்களுக்கு இடையில் நிரப்பும் க்ரீம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதற்காக, பால், தூள் சர்க்கரை, மஸ்கார்போன் சீஸ் மற்றும் வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் ஆகியவற்றை ப்ளெண்டரில் சேர்ந்து கிரீம் பதத்திற்கு வரும் வரை நன்கு பீட் செய்ய வேண்டும். அவ்வளவு தான் கிரீம் ரெடி.



இப்பொது, கேக் லேயரை எடுத்து அடித்ததில் வைத்த பிறகு அதன் மேல் க்ரீம் தடவிக்கொள்ளுங்கள். க்ரீம் லேயர் மேல் மற்றொரு கேக் லேயரை வையுங்கள். இப்படி உங்களுக்கு தேவையான அளவு லேயரை 3 அல்லது 4 என்ற கணக்கில் வைத்து கொள்ளலாம். இறுதியாக அலங்கரிக்க வீட்டில் டார்க் சாக்லேட் இருந்தால் அதனை பொடியாக்கி அதனுடன் பால் கலந்து சாக்லேட் கூல் செய்து கொள்ளுங்கள். இதனை, சாக்லேட் கேக் மீது பரவலாக ஊற்றி அதன் மேல் தூள் செய்யப்பட்ட பிஸ்தாவை தூவி பிறகு பரிமாறலாம். காட்டாயம் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
Published by:Sankaravadivoo G
First published: