“எனக்கு சாதத்துடன் ரசம் ஊற்றி சாப்பிடுவது மிகவும் பிடிக்கும்” - தீபிகா படுகோன்

“எனக்கு சாதத்துடன் ரசம் ஊற்றி சாப்பிடுவது மிகவும் பிடிக்கும்” - தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

கேரவனில் மேக்அப் செய்துகொண்டே பதில் அளிக்கும் போக்கு மிகவும் எதார்த்தமாகவும், ரசிக்கும்படியாகவும் இருக்கிறது.

 • Share this:
  தீபிகா படுகோன் தனித்துவம் கொண்ட பாலிவுட் நடிகை என்பது பலருக்கும் தெரியும். ஆனால் திரையைத் தாண்டி அவருடைய நிஜ வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமெனில் நேர்காணல்கள், சமூகவலைதளங்களை பார்த்தாலே போதும். அப்படி நேற்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசம் சாதம் மிகவும் பிடிக்கும் என பகிர்ந்துகொண்டுள்ளார்.

  தீபிகா கடந்த ஆண்டு அதாவது டிசம்பர் 31 ஆம் தேதி இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து தளங்களிலும் தன்னுடைய அக்கவுண்டில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தையும் அழித்துவிட்டு மீண்டும் வருவேன் என கூறினார். அவருடைய அந்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியது. அவர் சமூகவளைதளங்களை விட்டு விலகிவிடுவாரோ என ரசிகர்கள் அச்சம் கொண்டனர். ஏனெனில் தீபிகா இன்ஸ்டா , ட்விட்டரில் மிகவும் ஆக்டிவானவர். எப்போதும் ரசிகர்களை எங்கேஜிங்காக வைத்துக்கொள்வார்.

  அவர் மீண்டும் வருவேன் என்று கூறியதைப் போல் ஜனவரி 1 ஆம் தேதி ஆடியோ டயரியை வெளியிட்டு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தார். அதன் பிறகு சில நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் தற்போதுதான் நான்காவது வீடியோவை பகிர்ந்துள்ளார்.

  சாக்‌ஷி தோனியின் ஃபேஷன் கோல்ஸ்! வைரலாகும் படம்

  அந்த வீடியோவில் நீங்கள் எந்த உணவை விரும்பி சாப்பிடுவீர்கள். சௌகரியமாக உணர்வீர்கள் என்று கேள்வி கேட்கின்றனர். அதற்கு அவர் வீட்டில் சமைக்கும் ரசம் சாதம் மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார். கேரவனில் மேக்அப் செய்துகொண்டே பதில் அளிக்கும் போக்கு மிகவும் எதார்த்தமாகவும், ரசிக்கும்படியாகவும் இருக்கிறது.

  நீங்களும் அந்த வீடியோவைக் காண....   
  View this post on Instagram

   

  A post shared by Deepika Padukone (@deepikapadukone)


  தீபிகா இப்படி சொல்வது இது முதல் முறை அல்ல. பல நேர்காணல்களில் உணவு குறித்து கேள்வி எழுப்பினாலே ரசம் பற்றி பேசிவிடுவார். கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அதிலும் இந்த கேள்வியை ஒருவர் கேட்க.. ரசம் சாதம் மாங்காய் ஊறுகாய் இறுதியாக ஃபில்டர் காஃபி இந்த காம்போதான் மிகவும் பிடிக்கும். இந்த உணவு இருந்தாலே எனக்கு விருந்துதான் என்று கூறினார்.
  Published by:Sivaranjani E
  First published: