டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கவனமாக நிர்வகிக்க வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவை உட்கொள்வது முக்கியம். மேலும் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க உதவும். நீரழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து இங்கு காண்போம்.
நீரிழிவு நோய் இருந்தால் சாப்பிட வேண்டிய உணவுகள்:
நீரிழிவு நோயாளிகள் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் பால் ஆகியவற்றிலிருந்து தங்களது ஊட்டச்சத்தை பெற வேண்டும் என்று தேசிய நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறந்த வகை உணவுகள்:
மாவுச்சத்து இல்லாத காய்கறிகளான கீரைகள், ப்ரோக்கோலி, மிளகு மற்றும் தக்காளி.
ஓட்மீல், பிரவுன் ரைஸ் மற்றும் தானிய ரொட்டிகள் போன்ற முழு தானிய உணவுகள்.
முலாம்பழம், ஆப்பிள், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள்.
மீன், கோழி, நட்ஸ் போன்ற புரதச்சத்து உணவுகள்.
தயிர் அல்லது பால் போன்ற குறைந்த கொழுப்பு உணவுகள்.
நீரிழிவு உணவுக்கு மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி மற்றும் மீன் போன்ற புரதச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் சிறந்தவை என லைசூலின் நிறுவனர், மருத்துவ ஆராய்ச்சியாளரும் ஜான் பர்ட் தெரிவித்துள்ளார். ஏனென்றால் கார்போஹைட்ரேட்டுகள் போல புரதங்கள் கொழுப்பை குளுக்கோஸாக மாற்றாது. அதேபோல பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் அதிகளவு நார்ச்சத்துக்களை கொண்டிருக்கின்றன, என்பதால் இவற்றை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது என தகவல் அளித்துள்ளார்.
இதையும் படிங்க | ‘இனியும் தயங்காதீங்க’ | பெண்களே… மெனோபாஸ் குறித்து நீங்கள் தயங்காமல் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
நீரிழிவு நோயாளிகள் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இதில் சோடா போன்ற சர்க்கரை பானங்கள், குக்கீகள், மிட்டாய் போன்ற இனிப்பான பதப்படுத்தப்பட்ட உணவுகள், வெள்ளை ரொட்டி, எண்ணெய்யில் வறுத்த உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
மேலும் நீங்கள் சரியான உணவு திட்டத்தை பின்பற்ற விரும்பினால், கீழே உள்ள மூன்று டயட் முறைகளை பின்பற்றவும்.
மத்திய தரைக்கடல் உணவுமுறை :
மத்திய தரைக்கடல் டயட் முறையில் பழங்கள், காய்கறிகள் மற்றும் நட்ஸ் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகள் எடுத்து கொள்ளப்படுகிறது. மேலும் மீன் போன்ற புரதம் நிறைந்த உணவுகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது,
உதாரணமாக 2009ம் ஆண்டு நீரிழிவு மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மத்திய தரைக்கடல் டயட் முறை மூன்று மாத காலம் பின்பற்றும் போது உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவு குறைவதாக தெரியவந்துள்ளது. 2010ம் ஆண்டு நீரிழிவு நோய் தடுப்பு மற்றும் மருத்துவ நடைமுறையில் வெளியிடப்பட்ட ஆய்வில் நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும், இரத்த சர்க்கரைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், உயர் இரத்த சர்க்கரை உட்பட இருதய ஆபத்து காரணிகளைக் குறைப்பதற்கும் மத்தியதரைக் கடல் டயட் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க | உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடவே கூடாத 7 உணவுகள்!
மத்திய தரைக்கடல் டயட் உணவு:
காலை உணவு : தயிருடன் பெர்ரி மற்றும் பருப்பு வகை உணவுகள்.
மதிய உணவு: ஆலிவ் எண்ணெய் சேர்த்த காய்கறிகள் சாலட், சால்மன் மீன் மற்றும் முழு கோதுமை ரொட்டி.
இரவு உணவு: காய்கறிகள், முழு தானியங்கள் அடங்கிய பீட்ஸா மற்றும் குறைந்த கொழுப்பு சீஸ்.
சிற்றுண்டி: நட்ஸ், பழங்கள் மற்றும் முட்டை.
DASH டயட் முறை:
DASH உணவு மத்தியதரைக் கடல் டயட் முறையை மிகவும் ஒத்திருக்கிறது. பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவானது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
எடுத்துக்காட்டாக, அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் இதழான நீரிழிவு ஸ்பெக்ட்ரமில் வெளியிடப்பட்ட 2017 ஆய்வில், DASH டயட் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதனால் DASH உணவு "நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவு முறை" என்று தெரிவித்துள்ளது.
மேலும் நீரிழிவு மேலாண்மையில் வெளியிடப்பட்ட 2019 ஆய்வில், DASH உணவைப் பின்பற்றுவது இளைஞர்களுக்கு மிகவும் அவசியமானது என்று கண்டறியப்பட்டது. மேலும் DASH உணவுமுறையை பின்பற்றும் டைப் 1 நீரிழிவு நோய் 18 நாட்களுக்குப் பிறகு நல்ல முடிவு தெரியும்.
கூடுதலாக, 2016ம் ஆண்டு நியூட்ரிஷன் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், DASH உணவைக் கடைப்பிடிப்பதால் கர்ப்பகால நீரிழிவு நோயை 71% வரை குறைக்க முடியும் என தெரியவந்தது.
DASH உணவு பட்டியல்:
காலை உணவு: காய்கறிகள், குறைந்த கொழுப்பு நிறைந்த ஆம்லெட்.
மதிய உணவு: காய்கறி சூப், சாலட் வகைகள்.
இரவு உணவு: கோழி கறி, உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள்.
சிற்றுண்டி : பழங்கள், நட்ஸ், குறைந்த கொழுப்பு நிறைந்த சீஸ்.
Keto diet உணவு முறை:
Keto diet உணவு முறை கார்போஹைட்ரேட் உணவுகள் சாப்பிடுவதை குறைத்து புரதச்சத்துக்கள் அடங்கிய உணவுகளை சாப்பிடுவதாகும். இது உங்கள் உடலில் கொழுப்புகளை எரித்து சர்க்கரை அளவை குறைக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது உதவியாக இருக்கும். உதாரணமாக, 2019ம் ஆண்டு ஊட்டச்சத்துகள் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், கீட்டோ உணவு இரத்த சர்க்கரையை குறைக்க பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
காலை உணவு: பன்றி இறைச்சி மற்றும் முட்டை.
மதிய உணவு: பழங்கள்
இரவு உணவு: காய்கறிகள்.
சிற்றுண்டி: வெண்ணெய், நட்ஸ், சீஸ்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Healthy Food, Healthy Life