முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / முடி வளர்ச்சி ஆரோக்கியமா இருக்க கறிவேப்பிலை சட்னி சாப்பிடுங்க...உங்களுக்கான ரெசிபி...

முடி வளர்ச்சி ஆரோக்கியமா இருக்க கறிவேப்பிலை சட்னி சாப்பிடுங்க...உங்களுக்கான ரெசிபி...

கறிவேப்பிலை சட்னி

கறிவேப்பிலை சட்னி

கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பார்கள். ஆனால் பெரும்பாலும் அதை சாப்பிடாமல் ஒதுக்கி வைப்போர்தான் அதிகம். எனவே இப்படி சட்னியாக அரைத்து கொடுத்தால் விரும்பாதவர்கள் கூட சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கறிவேப்பிலை முடி வளர்ச்சியை தரும் என்பார்கள். இதனாலேயே கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பார்கள். ஆனால் பெரும்பாலும் அதை சாப்பிடாமல் ஒதுக்கி வைப்போர்தான் அதிகம். எனவே இப்படி சட்னியாக அரைத்து கொடுத்தால் விரும்பாதவர்கள் கூட சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள் :

எண்ணெய் - 1 tsp

எள்ளு - 1 tsp

துருவிய தேங்காய் - 1/2 கப்

பச்சை மிளகாய் - 3-4

கறிவேப்பிலை - 1 கைப்பிடி அளவு

கொத்தமல்லி - 1/2 கைப்பிடி அளவு

இஞ்சி - 1/2 துண்டு

உப்பு - தே.அ

தக்காளி - சிறியது 1

தாளிக்க :

நல்லெண்ணெய் - 1 tsp

கடுகு - 1/2 tsp

சீரகம் - 1/4 tsp

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

முதலில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எள்ளு போட்டு வெடிக்கும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக இஞ்சி, பச்சை மிளகாய் , தேங்காய் சேர்த்து வதக்கவும்.

புதினா இலையில் இட்லி பொடி அரைச்சிருக்கீங்களா..? இந்த ரெசிபிதான் அது...

இறுதியாக தக்காளி குழைய வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

இதை ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொண்டு தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டினால் கறிவேப்பிலை சட்னி தயார்.

First published:

Tags: Curry leaves, Hair growth, Hair loss