சேமியா நிறையா இருக்கா.. அப்போ இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க..

இது ஒரு டெசர்ட் வகை உணவாகவும் இருக்கும். உப்புக்கு பதிலாக சர்க்கரையைச் சேர்த்தால் ப்ரேக் டைம் உணவாக இருக்கும் தயிர் சேமியா.

சேமியா நிறையா இருக்கா.. அப்போ இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க..
தயிர் சேமியா
  • Share this:
சேமியாவில் பாயாசம், உப்புமா, கேசரி , இனிப்பு பலகாரங்கள் என பல விதமான ரெபிக்களை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இந்த தயிர் சேமியா செய்து பாத்திருக்கீங்களா...ட்ரை பண்ணி பாருங்க சேமியாவை பிடிக்காதவர்களுக்கும் பிடித்து போகும்.

தேவையான பொருட்கள்:

சேமியா - 2 கப்


வெங்காயம் - ஒன்று

தயிர் - 2 கப்

பால் - ஒரு கப்,பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிதளவு,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு - கால் டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்,

கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்,

முந்திரி - 5செய்முறை:

வானலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்கள் சேர்த்து, சிவந்தபின் சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் சேமியா சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேகவைக்க வேண்டும்.

அதன் பின்னர் சேமியா நன்றாகக் குழையுமாறு வெந்தபின்பு எடுத்து நன்றாக ஆறவைக்க வேண்டும். பிறகு அத்துடன் தயிர், பால் சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு பரிமாறலாம். சுவையான தயிர் சேமியா ரெடி.

குறிப்பு:

தயிர் சேமியாவை நன்றாக குழைய விட வேண்டும் அப்போதுதான் சுவை மிகுதியாக இருக்கும். இனிப்பாக வேண்டும் என்றால் உப்புக்கு பதிலாக சர்க்கரையை போட்டுக்கொள்ளலாம்
First published: August 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading