ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இந்த பிரபலங்களுக்கு தயிர் சாதம்தான் மிகவும் பிடிக்குமாம்.. காரணம் தெரிஞ்சா உங்களுக்கும் பிடிக்கும்..!

இந்த பிரபலங்களுக்கு தயிர் சாதம்தான் மிகவும் பிடிக்குமாம்.. காரணம் தெரிஞ்சா உங்களுக்கும் பிடிக்கும்..!

தயிர் சாதம்

தயிர் சாதம்

கோடை வெயிலை சமாளிக்க தயிர் மிகவும் சிறப்பான ஒன்று. வெயிலுக்கு இதமாக மதிய நேரத்தில் தயிர் சாதம் சாப்பிடலாம். தயிர் சாதம் சுவையானது மற்றும் சத்தானது. தயிர் சாதத்தில் அதிக புரதம், ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் கூட பல பகுதிகளில் வெயில் இன்னும் வெளுத்து வாங்கி வருகிறது. கடும் வெயில் இன்னும் நீடிக்கும் நிலையில் குளிர்ச்சியான மற்றும் ஆரோக்கிய உணவுகளை தொடர்ந்து எடுத்து கொள்வது அவசியமாகிறது.

கோடை வெயிலை சமாளிக்க தயிர் மிகவும் சிறப்பான ஒன்று. வெயிலுக்கு இதமாக மதிய நேரத்தில் தயிர் சாதம் சாப்பிடலாம். தயிர் சாதம் சுவையானது மற்றும் சத்தானது. தயிர் சாதத்தில் அதிக புரதம், ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இவை அனைத்தும் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தயிர் சாதம் சாப்பிடுவதால் கிடைக்கும் சில அற்புத நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

* தயிர் ஒரு புரோபயாடிக் பால் தயாரிப்பு என்பதால் நம் செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும். அரிசி ஒரு உயர் புரத உணவு, இதுவும் செரிமானத்திற்கும் உதவுகிறது. இரண்டையும் சேர்த்து தயிர் சாதமாக சாப்பிடுவது வயிறு மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

* தயிர் சாதம் உங்கள் மனது மற்றும் உடல் இளைப்பாற உதவும் ஒரு உணவாகும். ஏனென்றால் இதில் அதிகமிருக்கும் புரோபயாடிக்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் மன அழுத்தத்தை தடுக்க உதவுகின்றன.

* ஒரு கிண்ணம் தயிர் சாதம் உங்களுக்கு நாள் முழுவதும் போதுமான ஆற்றலை வழங்க கூடும். தயிரில் கார்போஹைட்ரேட் உள்ளது, இது செரிமான நொதிகளால் உடைக்கப்பட்டு உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது.

* பொது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சருமத்திற்கு பல நன்மை அளிக்கும் பண்புகளையும் தயிர் சாதம் கொண்டுள்ளது. தயிர் சாதம் உங்கள் சருமத்தை தெளிவாக வைக்க உதவுகிறது.

* குறைந்த உப்பை பயன்படுத்தி தயிர் சத்தம் சாப்பிடுவது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

குறைந்த எண்ணெய் மற்றும் கலோரிகளை கொண்டு தயாரிக்கப்படுவதால் பல பாலிவுட் பிரபலங்கள் தென்னிந்திய உணவுகளை மிகவும் விரும்புகிறார்கள். தயிர் சத்தத்தை தங்கள் டயட்டில் சேர்த்து பலன் பெற்ற சில பாலிவுட் பிரபலங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

காலை உணவை ஹெல்தியாக்கணுமா..? டிரை பண்ணிப்பாருங்க பீட்ரூட் இட்லி...

ஆலியா பட்:

ஆலியா பட் ஒரு பெரிய ஃபிட்னஸ் ஃப்ரீக் மற்றும் பலருக்கு எடை குறைப்பு முயற்சியில் உத்வேகமாக இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். நடிகை எப்போதும் தனது டயட் பிளானிலும் கவனம் செலுத்துகிறார். நடிகை ஆலியா பட் தயிர் சாதத்தை விரும்பி சாப்பிடுகிறார். ஏனெனில் இது அவருக்கு மிகவும் பிடித்த வீட்டு உணவு.

மலைக்கா அரோரா:

மற்றொரு பாலிவுட் ஃபிட்னஸ் நடிகையான மலைக்கா அரோரா, சினிமா துறையில் சிறந்த உடல்வாகு கொண்டவர்.இவர் தனது உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் தினசரி அடிப்படையில் கடைபிடிக்கும் டயட் பிளானை அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்கிறார். இந்நிலையில் தனது போஸ்ட் ஒன்றில் மலாக்கா தான் ஒரு பெரிய தயிர் சாத ரசிகை என்றும், இதை எப்போதுமே தனது டயட் பிளானில் வைத்திருக்க விரும்புவதாகவும் கூறினார்.

ரகுல் ப்ரீத் சிங்:

ஃபேஷன் ஐகான் மற்றும் ஃபிட்னஸ் குயின்-ஆக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், தான் வீட்டில் சமைத்த உணவை மட்டுமே சாப்பிடுவதாகவும், வெளியில் சாப்பிடுவதை தவிர்ப்பதாகவும் கூறி உள்ளார். தனது டயட்டின் ஒரு பகுதியாக தயிர் சாதம் சாப்பிடுவதை விரும்புவதாக ரகுல் ப்ரீத் சிங் குறிப்பிட்டு உள்ளார்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Curd