நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படும் ஒன்று தயிர். பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் தயிரில் அடங்கி இருக்கிறது. செரிமானத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படும் தயிர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகாரியாக செய்யும் பால் அடிப்படையிலான உணவு பொருளாகவும் இருக்கிறது.
தயிரை உங்கள் டயட்டில் ஆண்டின் எந்த சீசனிலும் சேர்த்து கொள்ளலாம் என்றாலும் அடிப்படையில் இதனை இரவில் எடுத்து கொள்வதை விட பகல் மற்றும் மத்திய நேரங்களில் எடுத்து கொள்வது நல்லது. தயிரில் நிறைந்துள்ள கால்சியம் நம் எலும்புகளை வலுவாக, ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. தவிர தயிர் நுகர்வு வயிறு உப்பசம் மற்றும் அசிடிட்டியை குறைக்கிறது. அனைத்து பருவகாலத்திலும் சாப்பிட கூடியது தயிர் என்றாலும், குளிர்காலத்தில் தயிர் எடுத்து கொள்ளும் போது சற்று கவனம் தேவை.
குளிர் சீசனில் இரவில் எடுத்து கொள்ளாமல் மதிய உணவின் போது தயிர் சாப்பிடுவது சிறந்தது. ஏற்கனவே ஜலதோஷம் போன்ற சுவாச கோளாறுகள் இருந்தால் குளிர் சீசனில் தயிர் உட்கொள்ளலை கட்டுப்படுத்துவதும் நல்லது. இரவில் தயிர் சாப்பிடும் போது 1 சிட்டிகை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காமல் பார்த்து கொள்ளும்.
தயிர் வழங்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்:
எலும்பு ஆரோக்கியம்:
தயிர் வழங்கும் முக்கிய நன்மைகளில் எலும்பு ஆரோக்கியம் ஒன்று. உடலின் எலும்புகளை வலுப்படுத்த உதவும் தயிரில் உள்ள கால்சியம் நம் எலும்பின் அடர்த்தியை சமப்படுத்த உதவுகிறது. தயிரில் குறைந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் இருப்பதால் சிறந்த எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
Also Read : ஒரு துண்டு இலவங்கப்பட்டை 2 கப் தண்ணீர்... இப்படி செய்தால் சுகர் கன்ட்ரோல் ஆகும்..!
சரும ஆரோக்கியம்:
பளபளப்பான சருமத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் குடலை ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக வைக்க தயிர் உதவுகிறது. தயிரில் இயற்கையான மாய்ஸ்ரைசிங் பொருட்கள் உள்ளன, இது சருமத்தை வறண்டு போகாமல் தடுக்கிறது. சில இரைப்பை குடல் பிரச்சனைகள் காரணமாக நிறைய பேர் முகப்பருவால் பாதிக்கப்படுகின்றனர். இந்த சிக்கலுக்கு தயிர் தீர்வாக இருக்கிறது. தயிரில் லாக்டிக் ஆசிட் இருப்பதால் பியூட்டி ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம். முகத்தில் இருந்து இறந்த செல்கள் மற்றும் கறைகளை நீக்குகிறது. வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
தயிரை உணவில் சேர்ப்பதற்கான வழிகள்...
சப்பாத்தி மாவில் சேர்க்கலாம்:
முழு கோதுமை மாவு அல்லது சுத்திகரிக்கப்பட்ட மாவு எதுவாக இருந்தாலும் அதில் தயிர் கலப்பதன் மூலம் ஊட்டச்சத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். தயிர் சேர்ப்பதால் சப்பாத்தி சாஃப்ட்டாக இருக்கும் மற்றும் நிகரற்ற ஊட்டச்சத்து மதிப்பை கொண்டிருக்கும்.
யோகர்ட் ஃப்ரூட் க்ரீம்:
குளிர்காலத்தில் நீங்கள் சற்று டல்லாக மற்றும் சோம்பலாக உணரலாம். எனவே தயிரில் ஸ்ட்ராபெர்ரி அல்லது மாதுளை சேர்த்து சாப்பிடுவது உங்களை முழுமையாக உற்சாகமாக வைக்கும்.
வெஜிடபிள் கர்ட் சாலட்:
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை கொடுப்பது சற்று சவாலான விஷயம். அவர்களுக்கு பிடித்த வழியில் ஆரோக்கியமான உணவை கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் உங்கள் குழந்தையின் உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை சேர்க்க நீங்கள் தயிருடன் அவர்களுக்கு பீடத்தை காய்கறிகளை சேர்த்து சாலட்டாக கொடுக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Curd, Winter diet