வெள்ளரிக்காய் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. உச்சி முதல் பாதம் வரை அனைத்திற்கும் நல்ல ஆரோக்கிய நன்மையை குறைக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி தருவதோடு சிறுநீரக கற்களை கரைக்க உதவும் மில்க் ஷேக்யை வெள்ளரிக்காய் பயன்படுத்தி தயார் செய்வது எப்படி என இந்த பதிவில் நாம் காணலாம்.
இது சிறுநீரக கற்களை குறைப்பதுடன், சரும ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கும். அதுமட்டும் அல்ல, கோடை வெயிலுக்கு இதமான உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும். வெள்ளரிக்காய் மில்க் ஷேக் தயாரிக்கும் முறையை இங்கே காணலாம்.
தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் - 3.
பால் - 1.5 கப்.
ஏலக்காய் - 10.
சர்க்கரை - 3 ஸ்பூன்.
ஐஸ்கட்டி தேவையான அளவு.
செய்முறை படி :
மில்க் ஷேக் செய்ய எடுத்துக்கொண்ட வெள்ளரிக்காயை, முதலில் தோல் நீக்கி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். பின்னர், பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
இதனிடையே மிக்ஸி ஜார் ஒன்று எடுத்து அதில் ஏலக்காய் மற்றும் 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
Also Read | இந்த 20 உணவுகளை இரவில் சாப்பிடக் கூடாதாம்.. ஏன் தெரியுமா..?
தற்போது இதனுடன் பொடியாக நறுக்கி வைத்த வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு ஒருமுறை அரைத்துக் கொள்ளவும்.
தொடர்ந்து போதுமான அளவு பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக இதுனுடன் தேவையான அளவு ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு ஒருமுறை அரைத்துக்கொள்ள சுவையான வெள்ளரிக்காய் மில்க் ஷேக் ரெடி!.
பதமாக தயார் செய்த இந்த மில்க் ஷேக்கினை ஒரு கிளாஸில் ஊற்றி, அதன் விளிப்பில் ஒரு வெள்ளரிக்காய் துண்டினை வைத்து கவர்ச்சியாக பரிமாறலாம். சர்க்கரைக்கு பதில் தேன் சேர்த்தும் பரிமாறலாம்.
பயன்கள் :
வெள்ளரிக்காய் மற்றும் பால் கொண்டு தயார் செய்யப்படும் இந்த மில்க் ஷேக்கில் போதுமான அளவு பொட்டாசியம் இருக்கிறது. இது, சிறுநீரக பாதை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க பெரிதும் உதவுகிறது.
அதுமட்டும் அல்ல, வெள்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சரியான உணவு.
தினமும் வெள்ளரிக்காயை உட்கொண்டால் தீவிரமான மலச்சிக்கலை நீக்கும். வெள்ளரிக்காயில் இன்சுலின் சுரப்பதற்கு, கணையத்தில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஹார்மோன் ஒன்று வெள்ளரிக்காய் சாற்றில் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cucumber, Food recipes, Health Benefits, Kidney Stone, Weight loss