ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகள் மற்றும் எடை குறைப்பு என்று வரும் பொழுது காய்கறிகள் தான் அனைவராலும் பரிந்துரைக்கப்படுகிறது. நிறைய காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், குறிப்பாக காய்கறிகளை அப்படியே சாப்பிடுவது ஊட்டச்சத்து குறையாமல் நமக்கு கிடைக்கும். அனைவருக்கும் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கு பொதுவாக சாலடில் வெங்காயம், தக்காளி, கேரட், விதைகள் புரோக்கோலி, குடை மிளகாய் ஆகியவை சேர்க்கப்படும். இதில் தவறாமல் வெங்காயம் தக்காளியுடன் தவறாமல் வெள்ளரிக்காயும் இடம் பெறும்.
பொதுவாகவே வெள்ளரிக்காய் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம், இது ஜீரோ கலோரி கொண்ட அதிகமான நீர்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் கொண்ட காய்கறி என்று கூறப்படுகிறது. ஆனால் வெள்ளரிக்காயை சாலட்டில் பயன்படுத்துவது வேஸ்ட், ஏன் என்றால் இதைவிட அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வேறு சில காய்கறிகளும் இருக்கின்றன என்பதை பப்ளில் ஹெல்த் லூசியானா மாநில பல்கலைக்கழகம் சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளது. இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சமீபத்தில் 32 வயதான பெண் ஒருவர் ஒரு குறிப்பிட்ட டயட்டை பின்பற்றி இருக்கிறார். அதில் அவர் தினமும் ஒரு கிண்ணம் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவில் பெரும்பாலானவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடுவார்கள். வெள்ளரிக்காய், உப்பு மற்றும் எலுமிச்சை சேர்த்தால் கிட்டத்தட்ட சாலட் தயார் என்று கூறும் அளவுக்கு சுவையானதாகவே இருக்கும். அது போல, அவரும் தினசரி சாலடில் வெள்ளரியை சாப்பிட்டு வந்துள்ளார்.
ஆனால் அவருடைய ஊட்டச்சத்து நிபுணர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வெள்ளரிக்காயில் ஊட்டச்சத்து இருந்தாலும், குறைவான ஊட்டச்சத்து கொண்ட காய்கறியாகும், எனவே சாலட் சாப்பிடும் பொழுது பீட்ரூட் மற்றும் தக்காளி ஆகிய இரண்டையும் சேர்க்க வேண்டும், அது மட்டுமல்லாமல் கீரை வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளரியில் இருக்கும் ஊட்டச்சத்து விவரங்கள் பின்வருமாறு:
கலோரிகள்: 8
கொழுப்பு: 1 கிராம்
ஃபைபர்: 3 கிராம்
புரதம்: 3 கிராம்
வைட்டமின் கே: 5 மிகி
வைட்டமின் சி: 5 மிகி
பொட்டாசியம்: 4 மிகி
இதர காய்கறிகளில் இருக்கும் ஊட்டச்சத்து விவரங்கள் இங்கே:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cucumber, Salad Recipes, Vegetable