ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உஷார்..!குளிர்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் இந்த பிரச்சனைகள் வருமாம்..

உஷார்..!குளிர்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் இந்த பிரச்சனைகள் வருமாம்..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

குளிர்காலத்தில் நீங்கள் குளிர்ச்சியை கொடுக்கும் வெள்ளரிக்காய் உட்கொண்டால் அது உடலில் உள்ள கபத்தின் அளவை அதிகரித்து விடும். இதனால் சளி இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் நாட்டின் ஒவ்வொரு பருவ நிலைக்கும் ஏற்ப, ஒவ்வொரு விதமான காய்கறி மற்றும் உணவு வகைகளை மக்கள் விரும்பி உண்பர். ஆனால் சிலருக்கு சில குறிப்பிட்ட காய்கறிகளின் மீதும் உணவு வகைகளின் மீதும் தீராத பற்று ஏற்பட்டுவிடும். அதற்கான பருவகாலங்கள் முடிந்த பின்பும் கூட அவற்றை உண்ண விரும்புவார்கள்.அந்த வகையில் வெள்ளரிக்காய் பிரியர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கான பதிவு தான் இது.

வெள்ளரிக்காயில் கிட்டத்தட்ட 96 சதவீதம் நீர் நிறைந்துள்ளது. எனவே கோடை காலத்தில் உடல் வெப்பத்தை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுப்பதில் முன்னிலை வகிக்கிறது. மேலும் சீரான செரிமானத்திற்கு உதவுகிறது. உடல் எடையை குறைப்பதற்கும் சூரிய ஒளியினால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கருவளையம் போக்குவதற்கும் வெள்ளரிக்காய் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இப்படிப்பட்ட நற்குணங்கள் உள்ள வெள்ளரிக்காயை நம்மால் குளிர்காலத்திலும் உண்ணுவதற்கும் அழகுப்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழலாம். அதற்கு முன் வெள்ளரிக்காயின் தன்மைகளை நாம் ஆராய வேண்டும். ஆயுர்வேத மருத்துவத்தின் படி வெள்ளரிக்காயில் மூன்று வித தன்மைகள் உள்ளன. அவை சீதா ( குளிர்ச்சி), ரூபன் ( குணப்படுத்துதல்) கஷாயா (துவர்ப்பு) ஆகும்.

Read More : தினம் ஒரு மாதுளை பழம்... சர்க்கரை நோயாளிகளுக்கு இவ்வளவு நன்மைகளா..?

வெள்ளரிக்காயானது தாவரத்திலிருந்து நேரடியாக கிடைப்பதால் இது ஒரு இயற்கை உணவாக உள்ளது. வெள்ளரிக்காய் உண்பதால் உடல் வெப்பம் தணிக்கப்பட்டு உடலுக்கு குளிர்ச்சியை கொடுப்பதுடன் முகப்பரு பிரச்சனைகள் மற்றும் ஒவ்வாமையால் ஏற்பட்ட பிரச்சனைகள் ஆகியவை அனைத்தையும் குணப்படுத்த உதவுகிறது. ஆயுர்வேதத்தில் முக்கியமாக கருதப்படும் கபம், பித்தம், வாதம் ஆகிய மூன்று தன்மைகளையும் சமப்படுத்தி உடலில் நீரின் அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. வெள்ளரிக்காய் இயற்கையாகவே குளிர்ச்சி தரும் தன்மையுடையதால் குளிர் காலத்தில் இதனை உண்பதை தவிர்க்க வேண்டும்.

ஏன் குளிர் காலத்தில் வெள்ளரிக்காய் உண்பதை தவிர்க்க வேண்டும் ?

இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும், இருமல், சளி போன்ற பிரச்சனைகளால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்களும் குளிர் காலத்தில் வெள்ளரிக்காய் உண்ணக்கூடாது. 
வெள்ளரிக்காயில் உள்ள குளிர்ச்சி தன்மை உங்கள் உடலின் வெப்பநிலையை குறைத்து விடும். குளிர் காலத்தில் உங்கள் உடலுக்கு மிதமான அளவு சூடு எப்போதும் தேவைப்படும்.
குளிர்காலத்தில் நீங்கள் குளிர்ச்சியை கொடுக்கும் வெள்ளரிக்காய் உட்கொண்டால் அது உடலில் உள்ள கபத்தின் அளவை அதிகரித்து விடும். இதனால் சளி இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
வெள்ளரிக்காயை உங்களால் ஒதுக்கவே முடியாது என்ற அளவுக்கு வெள்ளரிக்காய் பிரியராக நீங்கள் இருந்தீர்கள் என்றால், முடிந்த அளவு இரவு நேரத்தில் வெள்ளரிக்காய் உண்பதை தவிர்த்து பகல் நேரத்தில் உண்ணலாம்.
பகலில் உண்ணும் பொழுது சூரிய ஒளியில் உங்கள் உடலில் வெப்பமானது தேவையான அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் ஏதேனும் நோய் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்தாலும் சூரிய ஒளியால் அவை தடுக்கப்படும்.
First published:

Tags: Cucumber, Health, Health Benefits