சிக்கன் நம் அனைவருக்கும் விருப்பமான அசைவ உணவாகும். சிக்கனை வைத்து பல்வேறு வித்தியாசமான மற்றும் சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அப்படி தற்போது ட்ரெண்ட் ஆகி வரும் சிக்கன் பாப்கார்ன் எப்படி செய்வதென்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பிரட் - 4
முட்டை - 1
பால் - 1 டேபிள் ஸ்பூன்
மைதா - 1/2 கப்
செய்முறை:
1. முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி, நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் கழுவிய சிக்கனை ஒரு பெளலில் போட்டு, அத்துடன் பூண்டு விழுது, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
2. பின்பு பிரட் துண்டுகளை நன்கு பொன்னிறமாக டோஸ்ட் செய்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின் பிரட் தூளுடன் சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
3. பிறகு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் பாலை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
4. பின் ஒரு தட்டில் மைதாவை போட்டுக் கொள்ள வேண்டும்.
5. இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.
6. பின்னர் ஒரு சிக்கன் துண்டை எடுத்து, முதலில் முட்டை கலவையில் பிரட்டி, பின் மைதாவில் பிரட்டி, அதன் பின் மீண்டும் முட்டையில் பிரட்டி, இறுதியாக பிரட் தூளில் பிரட்டி பின்னர் அதனை எண்ணெயில் போட வேண்டும்.
7. இப்படி அனைத்து சிக்கனையும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கிரிஸ்பியான சிக்கன் பாப்கார்ன் ரெடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chicken, Chicken popcorn