Home /News /lifestyle /

செஃப் குணால் கபூரின் சுவையான 10 நிமிட பிரியாணி ரெசிபி : மிஸ் பண்ணிடாதீங்க...

செஃப் குணால் கபூரின் சுவையான 10 நிமிட பிரியாணி ரெசிபி : மிஸ் பண்ணிடாதீங்க...

பிரியாணி

பிரியாணி

Biriyani Recipe | வெறும் 10 நிமிடத்தில் சுவையான பிரியாணி செய்வது எப்படி என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
செஃப் குணால் கபூரின் வெறும் 10 நிமிடத்தில் சுவையான பிரியாணி செய்வது எப்படி என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அதுகுறித்து இங்கு காண்போம்.,

பிரியாணி செய்ய தேவையான பொருட்களை இங்கே காண்போம்.,

பாசுமதி அரிசி - 3 கப்
தண்ணீர் - தேவையான அளவு
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
பால் - ¼ கப்
எண்ணெய் - தேவையான அளவு
பிரியாணி இலைகள் - 2
ஸ்டார் பூ - 2
இலவங்கப்பட்டை - 2
கிராம்பு - 7
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
ஏலக்காய் - 10
சீரகத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1½ கப்
பச்சை மிளகாய் கீறியது - 2
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1 துண்டு
புதினா இலைகள் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
ரோஸ் வாட்டர் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
ஆரஞ்சு - 1



பிரியாணி செய்வது எப்படி?

முதலில் வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, ஸ்டார் பூ கிராம்பு, மிளகுத்தூள், ஏலக்காய் சேர்க்கவும். (உங்கள் பிரியாணிக்கு சுவையை கொண்டு வருவதற்கு ஸ்டார் மிக முக்கியமான பொருட்களில் ஒன்று என குணால் கபூர் கூறியுள்ளார்).

அடுத்த படியாக பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சியை சேர்க்கவும். பின்னர் ஆரஞ்சு சாறு மற்றும் புதினா இலைகள் சேர்த்து நன்கு வதக்கவும். (பிரியாணிக்கு ஏன் ஆரஞ்சு என்று யோசிக்கிறீர்களா? ஏனெனில் இது பிரியாணிக்கு ஒரு சிட்ரஸ் சுவையை அளிக்கிறது மற்றும் அரிசியில் உள்ள மாவுச்சத்தை குறைக்கிறது என குணால் கூறியுள்ளார்).

Masala Idly | ருசியான மசாலா இட்லி செய்முறை!

இதனை நன்கு கலந்து 3 முதல் 4 நிமிடங்கள் சமைக்கவும். இப்போது இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். நன்கு கொதித்த பின்னர் இதனை எடுத்து ஒரு வடிகட்டியைப் பயன்படுத்தி வடிகட்டவும். வடிகட்டிய சாற்றை மட்டும் ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் வைக்கவும். இதில் உப்பு, ரோஸ் வாட்டர், மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும். நன்கு கொதி வந்ததும் இறுதியாக ஊறவைத்த அரிசியை இதில் சேர்க்கலாம்.

அரிசி மற்றும் தண்ணீரின் அளவு சமமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்போது, ​​பாலில் கரைத்த குங்குமப்பூவை இதன் மேல் சேர்க்கவும். பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி, குறைந்த தீயில் சமைக்கவும். சிறிது நேரம் கழித்து திறந்தால் சுவையான பிரியாணி ரெடி!.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Biriyani, Food

அடுத்த செய்தி