Home /News /lifestyle /

பசும்பாலில் கொரோனா வைரஸை அழிக்கும் ஆற்றல் உள்ளதா..? ஆய்வில் வெளியான தகவல்..!

பசும்பாலில் கொரோனா வைரஸை அழிக்கும் ஆற்றல் உள்ளதா..? ஆய்வில் வெளியான தகவல்..!

பசும்பால்

பசும்பால்

பல நுண்ணுயிரிகள், வைரஸ்கள் மற்றும் பிற நோய்க்கிருமிகளுடன் போராடும் திறன் கொண்ட பசுவின் பாலில் போவின் லாக்டோஃபெரின் என்ற புரதம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வின் போது கண்டறிந்தனர்.

தொற்றுநோய்கள் அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில், ஒவ்வொருவரும் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். அதனால்தான் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் டயட்டை எடுத்துக்கொள்ளவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த பட்டியலில், பால் எப்போதும் நமது ஆரோக்கியமான உணவின் முக்கிய பகுதியாகும். ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி பால் குடிக்கின்றனர்.

ஆனால் சில நிபுணர்கள் பசும் பால் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்று கூறுகிறார்கள். இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்புகளை பலப்படுத்துகிறது, மனதை கூர்மைப்படுத்துகிறது மற்றும் வேலை செய்யும் திறனை அதிகரிக்கிறது.

இதுமட்டுமன்றி சமீபத்திய ஆய்வில் பசுவின் பால் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது என்று தெரியவந்துள்ளது. டெய்லி மெயிலில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின்படி, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் பசுவின் பாலில் வைரஸ்-தடுப்பு பண்புகளைக் கொண்ட புரதம் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இந்த புரதம் ஒருவரின் உடலில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும். இந்த ஆய்வின் முடிவுகள் 'ஜர்னல் ஆஃப் டெய்ரி சயின்ஸ்' இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆய்வில் என்ன நடந்தது?

பெரும்பாலான பாலூட்டிகளின் பாலில் லாக்டோபிரான் என்ற புரதம் உள்ளது. பல நுண்ணுயிரிகள், வைரஸ்கள் மற்றும் பிற நோய்க்கிருமிகளுடன் போராடும் திறன் கொண்ட பசுவின் பாலில் போவின் லாக்டோஃபெரின் என்ற புரதம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வின் போது கண்டறிந்தனர்.



சோதனையின் போது, ​​இந்த புரதம் SARS-CoV-2 வைரஸ் செல்களுக்குள் நுழைவதைத் தடுக்கிறது, அதே நேரத்தில் வைரஸுக்கு எதிராக போராட செல்களுக்கு உதவுகிறது.

முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..? வாரத்தில் ஒரு முறையேனும் சாப்பிடுங்கள்..!

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்..?

மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் உள் மருத்துவத் துறையின் தலைமைப் புலனாய்வாளர் ஜொனாதன் செக்ஸ்டன், மருத்துவ பரிசோதனைகளின் போது போவின் லாக்டோஃபெரின் வைரஸ் தடுப்பு செயல்பாட்டைக் காட்டியதாகக் கூறினார். உதாரணமாக, போவின் லாக்டோஃபெரின் கொண்ட மருந்துகள் வைரஸ் தொற்றுகளின் தீவிரத்தை குறைக்கும். ரோட்டா வைரஸ் மற்றும் நோரோவைரஸ் ஆகியவையும் இதில் அடங்கும்.

 

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: CoronaVirus, Cow Milk, Milk

அடுத்த செய்தி