முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Coronavirus : நோய் எதிர்ப்பு சக்தியை பெற உங்கள் லஞ்ச் பாக்ஸில் இருக்க வேண்டிய 5 உணவுகள்

Coronavirus : நோய் எதிர்ப்பு சக்தியை பெற உங்கள் லஞ்ச் பாக்ஸில் இருக்க வேண்டிய 5 உணவுகள்

லஞ்சு பாக்ஸ்

லஞ்சு பாக்ஸ்

வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணிய படையெடுப்பாளர்களுக்கு எதிராக நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து மிக்க உணவு மிகவும் முக்கியமாகிறது.

  • 2-MIN READ
  • Last Updated :

நம்முடைய வாழ்க்கையில் தினந்தோறும் மில்லியன் கணக்கான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்கொள்கிறோம். இதில் கொரோனா போன்ற சில வைரஸ்கள் நமது அன்றாட வாழ்க்கையை முடக்குவதோடு மட்டுமின்றி, மரணத்திற்கு வழிவகை செய்யும் அளவிற்கு மோசமானவையாக உள்ளன. எனவே தான் உடலுக்கு வைரஸ் போன்ற கிருமிகளை எதிர்த்து போராட கூடுதல் சக்தி தேவைப்படுகிறது.

வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணிய படையெடுப்பாளர்களுக்கு எதிராக நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து மிக்க உணவு மிகவும் முக்கியமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி என்பது, சுகாதாரமான பழக்கம் வழக்கம், ஊட்டச்சத்து நிறைந்த சமச்சீர் உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறைகளைப் பின்பற்றுவது போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் மூன்று அலைகளோடு போராடியது போதாது என்றும், தற்போது மீண்டும் தொற்று பரவல் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதே சமயத்தில் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைக்கு முடிவுகட்டப்பட்டு வருகிறது. எனவே பள்ளி, கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகள், ஆபீஸ் செல்லும் பணியாளர்கள் என அனைவரும் கவனமுடன் இருப்பதும், சத்தான உணவை எடுத்துக்கொள்வதும் அவசியமாகும். தற்போதைய சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக நமது அன்றாட லஞ்ச் பாக்ஸில் இருக்க வேண்டிய 5 உணவுகள் பற்றி பார்க்கலாம்...

1. லஞ்ச் பாக்ஸை விட லஞ்ச் பேக் சிறந்தது:

இனி சிறிய அளவிலான லஞ்ச் பாக்ஸிற்கு பதிலாக ஒரு லஞ்ச் பேக்கை கையில் எடுத்துச் செல்வதை வழக்கமாக்குங்கள். ஏனெனில் ஒரு நடுத்தர அளவிலான லஞ்ச் பேக்கில், உங்கள் மதிய உணவுடன், தின்பண்டங்கள், தண்ணீர் மற்றும் ஜூஸ், தயிர் போன்ற பிற திரவ உணவுகளை எடுத்துக்கொண்டு செல்லலாம்.

2. லஞ்ச் பாக்ஸில் இருக்க வேண்டியவை:

வெயிட் கூடிவிடுமோ என்ற கவலை இல்லாமல், உங்களுக்கென ஒரு நல்ல உணவைப் பேக் செய்யுங்கள். அதில் சாதம் அல்லது ரொட்டி அல்லது இரண்டையும் வைத்துக்கொள்ளலாம். அத்துடன் பருப்பு, சீசன் காய்கறிகள் மற்றும் சாலட் ஆகியவற்றிற்கும் இடம் கொடுங்கள். ​​இது ஒரு எளிமையான மதிய உணவு, உங்கள் பசிக்கு ஏற்ப இதில் உள்ள பொருட்களின் அளவை குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்யலாம்.

கார்போஹைட்ரேட் உணவுகள் உண்மையிலேயே உடல் எடையை அதிகரிக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்

3. ஸ்நாக்ஸை மறக்காதீர்கள்:

அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள பெட்டி கடைகள் அல்லது டீ கடைக்குச் சென்று நொறுக்குத்தீனிகளை வாங்கிச் சாப்பிடுவதை விட, வீட்டிலிருந்தே ஸ்நாக்ஸ் வகைகளை தயார் செய்து எடுத்துச் செல்வது சிறப்பானது. இதில், மற்றொரு ப்ளஸ் பாயின்ட் என்னவென்றால், நீங்கள் வீட்டிலிருந்து தின்பண்டங்களை எடுத்துச் செல்லும்போது, ​​நீங்கள் பல வகையான சாய்ஸில் இருந்து சிறப்பான ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

4. தண்ணீர் பாட்டிலை மறக்காதீர்கள்:

அலுவலகத்தில் கண்டிப்பாக தண்ணீர் கிடைக்கும் என்றாலும், அங்கு சிறிய அளவிலான கோப்பைகள் தான் தண்ணீர் அருந்த வைக்கப்பட்டிருக்கும். எனவே இது ஒரு நாளில் உங்களுக்கு தேவையான நீரின் அளவை பாதிக்கலாம். உங்கள் சொந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வது புத்திசாலித்தனம், நிச்சயமாக நீங்கள் அலுவலகத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் அதனை நிரப்பிக்கொண்டு, விருப்பம் போல் நிறைய தண்ணீர் பருகலாம்.

குழந்தைகள் எப்போதும் மேகி கேட்கிறார்களா..? அதை ஆரோக்கியமானதாக மாற்றும் ரெசிபீஸ் இதோ...

5. நீரேற்றத்திற்கான உணவுகள்:

வெறும் தண்ணீரை மட்டும் தொடர்ந்து குடித்துக்கொண்டிருப்பது சில நேரங்களில் சலிப்பை தரலாம். எனவே உங்கள் மதிய லஞ்ச் பேக்கில் லஸ்ஸி அல்லது உப்பு சேர்க்கப்பட்ட மோர், பால், ஜூஸ் போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள். இல்லை என்றால் வெள்ளரிக்காய், புதினா, எலுமிச்சை ஆகியவற்றை கொண்டு சுவையூட்டப்பட்ட தண்ணீரையும் எடுத்துச் செல்லலாம்.

முக்கியமான பிற விஷயங்கள்:

* உங்கள் மதிய உணவில் சீசன் காய்கறிகளை கட்டாயம் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* நேரம் இல்லை என்றால், எளிதான அதே நேரம் சமைக்க விரைவான உணவை தயார் செய்யுங்கள். உதாரணமாக, பருப்பு, மற்றும் சப்ஜிக்கு பதிலாக, நீங்கள் ஒரு கிச்சடி தயார் செய்து, அதில் ஒரு துளி நெய் சேர்க்கலாம்.

* உங்கள் மதிய உணவுக்கான லஞ்ச் பேக்கை ஓவர்லோடு செய்யாதீர்கள்.

*ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு மட்டுமே பேக் செய்யுங்கள். வீட்டிற்கு மீதம் எடுத்து வராத அளவிற்கு சாப்பாட்டை சாப்பிட்டு முடியுங்கள்.

First published:

Tags: CoronaVirus, Immunity Diet