குக் வித் கோமாளி கனியின் கருவாட்டுக் குழம்பு : அசத்தல் சுவையில் செய்ய ரெசிபி இதோ..!

கருவாட்டுக் குழம்பு

இந்த கருவாட்டுக் குழம்பு களி செய்து சாப்பிட்டால் பொருத்தமாக இருக்கும்.

  • Share this:
    கருவாட்டு குழம்பு கிராமங்களில் மட்டுமன்றி நகர்புறங்களிலும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக மாறிவிட்டது. ஆனால் சிலருக்கு எப்படி செய்வது என்று தெரியவில்லை. அவர்களுக்காக குக் வித் கோமாளி வெற்றியாளரான கனி தன்னுடைய யூடியூப் சேனலில் எப்படி செய்வது என கற்றுத்தருகிறார். அதன் ரெசிபி இதோ...

    தேவையான பொருட்கள் :

    நல்லெண்ணெய் - 4 tsp
    கடுகு - 1 tsp
    வெந்தையம் - 1/4 tsp
    சீரகம் - 1/2 tsp
    கருவேப்பிலை - சிறிதளவு
    சின்ன வெங்காயம் - 4
    பெரிய வெங்காயம் - 3
    தக்காளி - 4
    வாழைக்காய் - 1
    கத்தரிக்காய் - 4
    முருங்கைக்காய் -1
    நாட்டு முச்சை - 1/2 கப்
    நெத்திலி கருவாடு - 150 கிராம்
    குழம்பு மிளகாய்த்தூள் - 2 tsp
    புளி - அரை எலுமிச்சை அளவு
    உப்பு - தே.அ
    தேங்காய் பால் - 1/2 கப்



    செய்முறை :

    முதலில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள்.

    நன்கு காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின் வெந்தயம் சேர்க்கவும்.

    அடுத்ததாக கருவேப்பிலை, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

    நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழைந்ததும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

    தயிர் சாப்பிடும்போது இந்த உணவுகளை சாப்பிடக் கூடாது..! மீறினால் என்ன ஆகும் தெரியுமா..?

    காய்கறிகளை பிரட்டிவிட்டு மிளகாய் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

    உப்பும் சேர்த்து சுவை பார்த்துக்கொள்ளுங்கள்.

    பின் தட்டுப்போட்டு மூடி கொதிக்கவிடுங்கள்.குழம்பு நன்கு கொதித்து தேவையான அளவு வந்ததும் அரைத்த தேங்காய் பாலை ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவிடுங்கள்.

    இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் கனியின் அன்னி செய்து காட்டிய கருவாட்டுக்குழம்பு தயார். அந்த வீடியோவில் இந்த குழம்பைதான் குக் வித் கோமாளியில் கருவாடு இல்லாமல் செய்து செஃப்-ஐ அசத்தியதாகக் கூறுகிறார்.

     

     
    Published by:Sivaranjani E
    First published: