• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் தோசை : பத்தே நிமிடத்தில் வேலை சுலபமாக முடிந்துவிடும்..!

நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் தோசை : பத்தே நிமிடத்தில் வேலை சுலபமாக முடிந்துவிடும்..!

சுரைக்காய் தோசை

சுரைக்காய் தோசை

இந்த நீர்ச்சத்து காய்கறிகள் சிறுநீரகத்திற்கு நன்மை தரக்கூடியவை. செரிமானமின்மை , பித்தம், உடல் சூடு போன்ற பல விஷயங்களுக்கு மருந்தாகும்.

  • Share this:
உடலில் நீர்ச்சத்து மிக மிக அவசியம். அதற்கு தண்ணீர் மட்டுமன்றி சாப்பிடும் உணவிலும் நீர்ச்சத்து மிக்க காய்கறிகளை பயன்படுத்துவது அவசியம். அப்படி வாரத்தில் ஒரு நாள் மட்டும் சுரைக்காய், புடலங்காய் போன்ற நீர்ச்சத்து காய்கறிகளை பயன்படுத்தலாம். இந்த நீர்ச்சத்து காய்கறிகள் சிறுநீரகத்திற்கு நன்மை தரக்கூடியவை. செரிமானமின்மை , பித்தம், உடல் சூடு போன்ற பல விஷயங்களுக்கு மருந்தாகும். அப்படி சுரைக்காய் பயன்படுத்தி தோசை எப்படி சுடுவது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சுரைக்காய் – 1
பச்சரிசி – 2 1/2 கப்
வெங்காயம் – 1
சீரகம் - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
இஞ்சி – 1 1/2 துண்டு
கருவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு



செய்முறை :

பச்சரிசியை ஒரு மணி நேரத்திற்கு ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

பின் வெங்காயம் , கருவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

சுரைக்காய் தோலை நீக்கிவிட்டு அவற்றையும் நறுக்கொள்ளுங்கள்.

ஒரு மணி நேரம் கழித்து அரிசியை கழுவி மிக்ஸியில் அரைக்க போடுங்கள். அதோடு நறுக்கி வைத்துள்ள சுரைக்காயையும் சேர்க்க வேண்டும். அதில் இஞ்சி , காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அதிகமான புரதச் சத்தை தரும் செட்டிநாடு கோழி ரசம்

இப்போது மூன்றையும் நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். தோசை சுடும் பதத்தில் மொர மொரப்பாக அரையுங்கள். மைய அரைக்க வேண்டாம்.

அரைத்ததும் ஒரு பாத்திரத்தில் வழித்துபோட்டு அதில் நறுக்கி வைத்துள்ள் வெங்காயம், கருவேப்பிலைகளை சேர்க்கவும். இறுதியாக உப்பு சேர்த்து பதம் பார்த்துவிட்டு அடுப்பில் கல் வைத்து பதமாக சுட்டு எடுக்கவும்.

அவ்வளவுதான் சுரைக்காய் தோசை தயார். இதற்கு காரசட்னி, தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: