அசைவ உணவுப் பிரியர்களுக்கு எப்போதும் இறைச்சி வகை இருக்க வேண்டும் என்பார்கள். காய்கறி குழம்பு என்றாலே அதிகமாக சாப்பிட மாட்டார்கள் அல்லது சாப்பிடாமலே தவிர்த்துவிடுவார்கள். அப்படி இருப்பவர்களுக்கு காய்கறிகளை பயன்படுத்தி அசைவ சுவையில் இந்த குழம்பை ஒருமுறை செய்து கொடுங்கள்.. பின் அடிக்கடி செய்யச் சொல்லி கேட்பார்கள்.
தேவையான பொருட்கள் :
கேரட் – 1, உருளைக்கிழங்கு – 2
காலிஃப்ளவர் சிறியது – 1
பீன்ஸ் – 10
பச்சை பட்டாணி – 1/2 கப்
தனி மிளகாய் தூள் – 1 tsp
கரம் மசாலா - 1/2 tsp
எண்ணெய் – 5 tsp
பிரியாணி இலை – 1
சோம்பு – 1 tsp
ஏலக்காய் – 2
பட்டை சிறிய துண்டு – 1
கிராம்பு – 2
உப்பு – 1 tsp
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
அரைக்க :
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
இஞ்சி சிறிய துண்டு – 2
முந்திரி பருப்பு – 15
செய்முறை :
முதலில் காய்கறிகளை பொடியாக நறுக்கி தயார் செய்துகொள்ளுங்கள். பின் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கெட்டியான பதத்தில் அரைத்துக்கொள்ளுங்கள்.
கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.
நன்கு வதங்கியதும் காய்கறிகளை சேர்த்து பிரட்டி 5 நிமிடங்களுக்கு வதக்குங்கள்.
பின் மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள்.
10 நிமிடங்கள் கொதித்த பிறகு இறக்கும் முன் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் காய்கறி மசாலா குழம்பு தயார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.