கொங்குநாடு சுவையில் சேனைக்கிழங்கு மசாலா : ரெசிபி இதோ..

கொங்குநாடு சுவையில் சேனைக்கிழங்கு மசாலா : ரெசிபி இதோ..
சேனைக் கிழங்கு மசாலா
  • Share this:
சேனைக்கிழங்கை வறுத்து சமைப்பது ஒரு சுவை என்றால் இது மசாலா கலந்த சுவையில் அருமையாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சேனைக்கிழங்கு - 300 கிராம்


மஞ்சள் பொடி - 1/2 tsp
கடுகு - 1 tsp
கருவேப்பிலை - 1 கொத்துஉப்பு - தே.அ
எண்ணெய் - தே.அ
பட்டை - 1 துண்டு
பூண்டு - 4
இஞ்சி - 1 துண்டு
கசகசா - 2 tbsp
தேங்காய் எண்ணெய் - 2 tbsp
காய்ந்த மிளகாய் - 2
கருவேப்பிலை - 1 கொத்து



செய்முறை

குக்கரில் சேனைக்கிழங்கை சுத்தம் செய்து போட்டுக்கொள்ளுங்கள். பின் அதில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து 2 விசில் வர வேக வையுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் விட்டு கறிவேப்பிலை சேர்த்து பொறித்துக்கொள்ளுங்கள். அடுத்து பட்டை, கிராம்புசேர்த்து வதக்குங்கள்.

பின் பூண்டு, காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்குங்கள். பின் கசகசா , தேங்காய் சேர்த்து வதக்குங்கள்.

கொத்தவரங்காய் பருப்பு உசிலி செய்து பாருங்கள்... எந்த குழம்புக்கும் பொருத்தமாக இருக்கும்

அடுத்ததாக அதை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

மீண்டும் கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துவிட்டு அரைத்த விழுது சேர்த்து பிரட்டுங்கள். பின் வேக வைத்த சேனைக்கிழங்கை சேர்த்து கலந்துவிடுங்கள். மசாலா நன்கு கலந்ததும் உப்பு சரி பார்த்துவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் சேனைக்கிழங்கு மசாலா தயார்.

 
First published: October 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading