காஷ்மீர் ஸ்டைல் பனீர் மசாலா... சாப்பிட்ட பிறகும் சுவை நாவை விட்டு அகலாது

காஷ்மீர் ஸ்டைல் பனீர் மசாலா... சாப்பிட்ட பிறகும் சுவை நாவை விட்டு அகலாது
காஷ்மீர் பனீர் மசாலா
  • Share this:
பனீர் சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும். எனவே இரவு டின்னருக்கு பனீர் செய்ய திட்டமிட்டிருந்தால் இந்த காஷ்மீர் பனீர் மசாலா செய்து அசத்துங்கள். 

தேவையான பொருட்கள் :

பனீர் - 300 கிராம்


பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
பட்டை - 2 துண்டு
இலை - 2ஏலக்காய் -6
ஓமம் - 1/2 tsp
தக்காளி - 1
காஷ்மீர் மிளகாய் தூள் - 1/2 tsp
இஞ்சி தூள் - 1/2 tsp
தயிர் - 1/4 கப்
வெந்தையப் பொடி - 1 tsp
கரம் மசாலா பொடி - 1 சிட்டிகை
கொத்தமல்லி - 2 கொத்துசெய்முறை :

முதலில் 500 ml தண்ணீரை கொதிக்க வைத்து தனியாக எடுத்து வையுங்கள். பின் பனீரை நறுக்கி பேனில் போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள். பின் அதை ஆறியதும் கொதிக்க வைத்த தண்ணீரில் போடுங்கள்.

தொக்கு செய்ய கடாய் வைத்து எண்ணெய் விட்டு பட்டை , இலை, ஏலக்காய் , பெருங்காயத்தூள் சேர்த்து வதக்குகள்.

பின் ஓமம் சேர்த்து பொறிக்க விடுங்கள். அடுத்ததாக தக்காளி சேர்த்து வதக்குங்கள். பின் மிளகாய் பொடி, வெந்தையப் பொடி, இஞ்சிப் பொடி சேர்த்து வதக்குங்கள்.பின் பனீர் ஊற வைத்துள்ள சுடு நீரை போதுமான அளவு ஊற்றுங்கள். சிறு தீயில் வைத்து 5-7 நிமிடங்களுக்குக் கொதிக்க வையுங்கள். கெட்டிப் பதம் வரும் வரை கொதிக்க வையுங்கள்.

பின் தயிர் சேர்த்து கிளறிவிடுங்கள். போதுமான பதம் வந்ததும் ஊற வைத்த பனீரை சேர்த்து மசாலாவை பிரட்டுங்கள். பின் சிட்டிகை கரம் மசாலாவை தூவுங்கள்.

அவ்வளவுதான் சுவையான காஷ்மீர் பனீர் மசாலா தயார்.
First published: October 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading