குடை மிளகாய் சாதம் எப்படி செய்வது..? ரெசிபி இதோ...

குடை மிளகாய் சாதம்

சற்று சோர்வாக உணர்கிறீர்கள் எனில் எளிமையான சமையலுக்கு இந்த ஆப்ஷன் பெஸ்டாக இருக்கும்.

 • Share this:
  இன்று என்ன சமைப்பது என தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா..? அல்லது  சற்று சோர்வாக உணர்கிறீர்கள் எனில் எளிமையான சமையலுக்கு இந்த ஆப்ஷன் பெஸ்டாக இருக்கும். குடைமிளகாய் சாதம் ருசியாகவும் இருக்கும். எப்படி செய்வது..?

  தேவையான பொருட்கள்

  பாஸ்மதி அரிசி - 1 கப்
  குடைமிளகாய் - 1 1/4 கப்
  கரம் மசாலா - 1 tsp
  வெங்காயம் - 1

  மசாலா அரைக்க :

  உளுத்தம் பருப்பு - 2 tsp
  தனியா - 2 1/2 tsp
  சீரகம் - 1 tsp
  காய்ந்த மிளகாய் - 4

  தாளிக்க

  எண்ணெய் - 1 tbsp
  கடுகு - 1 tsp  செய்முறை :

  பாஸ்மதி அரிசியை உதிரியாக பதமாக வேக வைத்து தண்ணீரை வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். குடை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

  கடாய் வைத்து எண்ணெய் விட்டு அரைக்க கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை வறுத்துக்கொள்ளுங்கள். காய வைத்து பின் மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

  அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளியுங்கள். பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

  காலை உணவுக்கு அசத்தலான சுண்டல் - நிமிடங்களில் செய்ய ரெசிபி இதோ..

  பின் குடை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். அரைத்த பொடியை சேருங்கள். கரம் மசாலாவும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  குடை மிளகாய் வெந்ததும் வேக வைத்த சாதத்தை சேர்த்து பிரட்டுங்கள். போதுமான உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

  கொத்தமல்லி தழை தூவி கிளறிவிடுங்கள். அவ்வளவுதான் குடைமிளகாய் சாதம் தயார். இதோடு வேக வைத்து உதிர்த்த மக்காசோளம் சேர்த்தாலும் ருசி அருமையாக இருக்கும்.

  இதற்கு ரைத்தா , உருளைக்கிழங்கு சிப்ஸ் பொருத்தமான காம்பினேஷன்.
  Published by:Sivaranjani E
  First published: