இதுவரை நீங்கள் சமைத்துப் பார்க்காத டிஷ் ரெசிபீஸ் : ரெஸ்டாரண்ட் சுவையில் செய்து கொடுத்து அசத்துங்கள்..!

சண்டே ஸ்பெஷல் உணவுகள்

வீட்டில் இருப்பவர்களையும் புதிய சுவை அனுபவத்தை கொடுத்து அசத்தலாம். டிரை பண்ணி பாருங்க...அட்டகாசமாக இருக்கும்.

  • Share this:
எப்போதும் ஒரே மாதிரியான உணவுகளை சமைத்து அளுத்துப்போன உங்களுக்கு இந்த உணவுப் பட்டியல் புது அனுபவத்தைத் தரும். அதோடு வீட்டில் இருப்பவர்களையும் புதிய சுவை அனுபவத்தை கொடுத்து அசத்தலாம். டிரை பண்ணி பாருங்க...அட்டகாசமாக இருக்கும்.

1. சீஸ் ரக்காக்கட் (லெபனீஸ் சீஸ் ரோல்) – Cheese Rakakat:

சீஸ் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை அனைத்து வயதினரும் விரும்புவர். இந்த சீஸ் ரோலை செய்து கொடுத்து, குடும்பத்தினரை அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

கஷாகாவன் சீஸ் (Kashakawan Cheese) – துருவியது அல்லது 2 இன்ச் நீளத்துண்டாக நறுக்கியது
வறுத்த எள் - 1 டீஸ்பூன்.
கொத்தமல்லி அல்லது புதினா (நறுக்கியது) - 1 டீஸ்பூன்.
ஸ்ப்ரிங் ரோல் ஷீட் - 12
கனோலா எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் - தேவையான அளவு
முட்டை - 1செய்முறை:

* ஃபில்லிங் செய்வதற்கு, ஒரு கிண்ணத்தில் துருவிய அல்லது 2 இன்ச் துண்டுகளாக வெட்டப்பட்ட சீஸ் துண்டுகளை சேர்க்கவும். துண்டுகளாக வெட்டிய சீஸை சேர்த்தால், அதன் தடிமன் விரல் அளவை விட பெரியதாக இருக்கக் கூடாது. இதனுடன் லேசாக வறுத்த எள், நன்றாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து கலக்கவும்.

* கொத்தமல்லி அல்லது புதினா உங்களுக்கு ஃபிரெஷ்ஷாக கிடைக்கவில்லை என்றால், காய்ந்த புதினாவை சேர்க்கலாம். காய்ந்த புதினாவை சேர்த்தால், 1 டீஸ்பூன் மட்டுமே சேர்க்கவும்.

* இந்த பொருட்களை நன்றாகக் கலந்து, ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டுகளில் வைத்து மடிக்கவும். ஷீட்டுகளின் முனைகளை சீல் செய்ய, தண்ணீர் அல்லது எக் வாஷை மேலே பூசவும்.

* எண்ணையில் பொரிக்க இருந்தால், வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாகும் வரை காத்திருக்கவும். எண்ணெய் நன்றாகக் காய்ந்த பின், மீடியம்-ஹை ஹீட் அளவில் வெப்பத்தைக் குறைத்து, தயார் செய்து வைக்கப்பட்ட ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டுகளை எண்ணெயில் போட்டு, தங்க நிறமாக மாறும் வரையில் பொரித்து எடுக்கவும்.

* நீங்கள் பேக் (Bake) செய்வதாக இருந்தால், ஸ்ப்ரிங் ரோல்களின் மீது எண்ணெய் தடவி, ஒரு நான்-ஸ்டிக் பானில் வைத்து, 15 முதல் 20 நிமிடங்கள் மைக்ரோ வேவ் ஓவனில் வைத்து பேக் செய்யவும். இடையில், ஒரு முறை ஸ்ப்ரிங் ரோல்களை திருப்பி வைக்கவும். இரண்டு பக்கங்களும் நன்றாக வெந்து, தங்க நிறத்தில் வரும் வரை பேக் செய்யவும்.

குறிப்பு: சீஸ் ரோல்களை ராப் செய்ய, ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டுகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இது சமைப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

ஷமி கபாப் முதல் கீமா பரோட்டா வரை சண்டேவை அசத்தலாக்கும் ஃபுட் ரெசிபீஸ்..!

2. ஆலிவ் மற்றும் பிரசர்வ்டு லெமன் சிக்கன் டஜீன் (Chicken Tagine)

சிக்கன் பெரிதும் விரும்பப்படும், பல்வேறு விதமாக சமைக்கக்கூடிய உணவுப்பொருள்.  அற்புதமான இந்த சிக்கன் டஜீனை சமைத்து விருந்தளிக்கவும்.

தேவையான பொருட்கள்:

சிறுசிறு துண்டுகளாக நறுக்கியது பூண்டு - 5
குங்குமப்பூ இழைகள், இஞ்சி விழுது, பொடித்த சீரகம் மற்றும் மஞ்சள் – ஒவ்வொன்றும் ¼ டீஸ்பூன்
இனிப்பு மிளகாய் - 1 டீஸ்பூன்
எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன்
நடுத்தர அளவு வெங்காயம், மெலிதாக நறுக்கியது - 3
சிக்கன் - 1 கிலோ
இலவங்கப்பட்டை - 1 துண்டு
Kalamata ஆலிவ்ஸ், விதை நீக்கியது மற்றும் பாதியாக நறுக்கியது - 8
பச்சை ஆலிவ்ஸ், விதை நீக்கியது மற்றும் பாதியாக நறுக்கியது - 8
பிரசர்வ் செய்யப்பட்ட எலுமிச்சை -1
சிக்கன் ஸ்டாக் - 1 கப்
எலுமிச்சை சாறு – ½ கப்
கொத்தமல்லி- சிறிதளவு
உப்பு மற்றும் கரு மிளகு – தேவையான அளவுசெய்முறை:

* பூண்டு, குங்குமப்பூ, இஞ்சி, மிளகு, சீரகம், மஞ்சள் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து ஒன்றாக கலக்கவும். கோஷர் சிக்கனைப் பயன்படுத்தாவிட்டால், 1/2 டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். சுவைக்காக மிளகு சேர்க்கவும். சிக்கன் மீது இந்த கலவையை பூசி, மாரினேட் செய்யவும். இந்த கலவை சிக்கனில் நன்றாக ஊற, 3 முதல் 4 மணி நேரம் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

* கனமான வாணலியில் எண்ணெய் சூடாக்கவும். அதில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து, நடுத்தர-குறைந்த வெப்பத்தில் பிரவுன் நிறத்தில் வரும் வரை வறுக்கவும். இதற்குக் குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் ஆகலாம். இதனுடன் இலவங்கப்பட்டையை சேர்க்கவும். இதற்கிடையில், நறுக்கிய வெங்காயத்தை, ஸ்கில்லட்டில் வைக்கவும். உங்களிடம் டஜீன் இருந்தால், சிக்கனை அதிலே வைக்கவும். இல்லையென்றால், அப்படியே ஸ்கில்லெட்டில் வைக்கவும்.

* வெங்காயத்தின் மீது சிக்கனை வைத்து, ஆலிவ்களை தூவுங்கள். பிரசர்வ் செய்யப்பட்ட எலுமிச்சையை நான்காக நறுக்கி, அதன் பல்ப் பகுதியை நீக்கி, தோலை நீளமான துண்டுகளாக வெட்டவும். இந்த துண்டுகளை சிக்கனின் மீது தூவி, சிக்கன் ஸ்டாக் மற்றும் எலுமிச்சை சாறு கலக்கி, சிக்கன் மீது ஊற்றவும்.

* டஜீன் அல்லது வாணலியை மூடி வைக்கவும். சிக்கன் நன்றாக வேகும் வரை, குறைந்த வெப்பத்தில் வைத்து 30 நிமிடங்கள் வரை சமைக்கவும். மேலே கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.

சீரக சம்பா அரிசியில் தேங்காய் பால் மட்டன் பிரியாணி : எப்படி செய்வது தெரியுமா?

3. ஹம்மஸ்  (hummus)

ஹம்மஸ் (hummus) மிகவும் ருசியான, ஆரோக்கியமான டிப். அதன் செய்முறை இங்கே.

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - 100 கிராம்
தஹினா - 500 கிராம்
பூண்டு - 5 கிராம்
ஆலிவ் எண்ணெய் - 10 மில்லி
எலுமிச்சை - 2 துண்டுகள்
உப்பு - சுவைக்கு சேர்க்கவும்
சோள எண்ணெய் - 4 மில்லிசெய்முறை:

* தஹினி, குளிர்ந்த நீர், ஆலிவ் எண்ணெய், சீரகம், உப்பு, பூண்டு மற்றும் எலுமிச்சை சேர்த்து, மென்மையாக கூழாக ஆகும் வரை மிக்சியில் அரைக்கவும். பின்பு, ஒரு டின் கொண்டைக்கடலையை சேர்க்கவும். இதனை வெதுவெதுப்பான நீரில் அலசி, மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரை, மென்மையான கூழாக ஆகும் வரை அரைக்கவும். ஹம்மஸ் மிருதுவாக, கட்டிகள் இன்றி, விழுது போல இருக்க வேண்டும். தண்ணீர் தேவைப்பட்டால், கூடுதலாக சேர்த்து அரைக்கலாம்.

* சுவை மற்றும் சீசனிங்கிற்காக, தேவைப்பட்டால் கூடுதலை உப்பு, சீரகம் மற்றும் / அல்லது எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். அரைக்கப்பட்ட ஹம்மஸ்சை பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றி, நீங்கள் விரும்பும் வகையில் அலங்கரித்து பரிமாறுங்கள்.

 
Published by:Sivaranjani E
First published: