சுண்டலில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி, இரும்பு சத்துக்கள் போன்றவை உங்களது உடல் ஆரோக்கியமாக செயல்பட உதவியாக உள்ளது. எனவே தேவையற்ற நொறுக்குத்தீனியை சாப்பிடாமல் மாலை நேர சிற்றுண்டியாக சுண்டல் சாப்பிடும் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரத்தில் ஏதாவது மொறுமொறுன்னு ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்தில் இருப்பார்கள். இதற்காகத் தேவையற்ற நொறுக்குத்தீனிகளை வாங்கி தங்களது பசியைப் போக்கிக்கொண்டாலும் ஆரோயமற்ற உணவுகள் நிச்சயம் உங்களுக்கு பல்வேறு உடல் நலப்பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
எனவே தேவையற்ற நொறுக்குத்தீனிகளை உட்கொள்ளாமல் ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு சுண்டல் சாப்பிடுங்கள் எனவும் பரிந்துரைக்கின்றனர். இந்நேரத்தில் கொண்டைக்கடலை எனப்படும் சுண்டலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன? உடலுக்கு எவ்வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்…
சுண்டலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :
சுண்டல் ப்ரவுன் மற்றும் வெள்ளை நிறத்தில் நமக்கு கிடைக்கிறது. சுண்டலில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி, இரும்பு, மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. எனவே ஈவினிங் ஸ்நாக்ஸாக சுண்டலைத் தேர்வு செய்யுங்கள். சுண்டலை வேகவைத்து சாப்பிடலாம்.. உங்களது சுவைக்கு ஏற்றபடி, வெங்காயம், சிறிதளவு மசால், கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து சாப்பிடலாம்..
ஹெல்தி காலை உணவுக்கு ராகி தோசை தான் பெஸ்ட்… இதோ ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக.!
சுண்டல் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்:
* சுண்டலில் உள்ள மெக்னீசயம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
* சுண்டல் சாப்பிடுவதால் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக்குறைக்கிறது மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் இரத்த அளவைப்பராமரிக்கிறது. மேலும் பெண்களின் மாதவிடாய் மற்றும் மாதவிடாய் நின்ற பின்னதாக ஏற்படும் அறிகுறிகளை அறியவும், இதனால் ஏற்படும் மனநிலை மாற்றங்களைப் போக்கவும் சுண்டல் உதவியாக உள்ளது.
* கருப்பை குழாயில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகிறது. கரு வளர்ச்சிக்கு சுண்டலில் உள்ள போலிக் அமிலம் உதவுகிறது.
* கொண்டைக்கடலையில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உடல் எலும்புகளுக்கு வலிமை அளிக்கிறது. மேலும் போலேட் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவியாக உள்ளது.
* கொண்டைக்கடலை சாப்பிடுவதால் உடலில் உள்ள நரம்பு செல்களைத் தூண்டும் நரம்பியக்கடத்திகளை உற்பத்தி செய்கிறது.
* சுண்டலில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள், ஆந்தோசையனிகள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் போன்ற சத்துக்கள் அதிகளவில் இருப்பதால் இரத்த நாளங்களில் உள்ள கொழுப்புக்கள் அடைப்பைத் தடுப்பதோடு, மாரடைப்பு,பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறையக்கூடும்.
மழைக்காலத்தில் "மஞ்சள் டீ" குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...
* மேலும் தினமும் இரவில் தூங்கும் போது சுண்டலை ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனைச் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும். இதோடு ஊறவைத்த சுண்டலை சாப்பிடும் போது ஆண்மை அதிகரிக்கும் எனவும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது போன்று சுண்டலில் ஏராளாமான நன்மைகள் அதிகளவில் இருப்பதால், எவ்வித அச்சமும் இன்றி தினமும் சுண்டலை நீங்கள் உங்களது ஈவினிங் ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.