ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இப்போதுதான் பேக்கிங் கற்றுக்கொள்கிறீர்களா..? இந்த 6 தவறுகளை மட்டும் செய்யாதீங்க..!

இப்போதுதான் பேக்கிங் கற்றுக்கொள்கிறீர்களா..? இந்த 6 தவறுகளை மட்டும் செய்யாதீங்க..!

பேக்கிங்

பேக்கிங்

நீங்கள் ஆரம்ப நிலை பேக்கிங் செய்பவராக இருக்கும் பட்சத்தில் முதலில் நீங்கள் எந்த முறையை பின்பற்ற வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கேக் அல்லது ரொட்டி என எந்த உணவு பொருளை நீங்கள் பேக்கிங் முறையில் தயாரித்தாலும் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டியது அவசியமாகும். பேக்கிங் செய்வதில் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு முறையில் அவை தயாரிக்கப்படுகின்றன. நீங்கள் ஆரம்ப நிலை பேக்கிங் செய்பவராக இருக்கும் பட்சத்தில் முதலில் நீங்கள் எந்த முறையை பின்பற்ற வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதை தவிர யூடியூப் அல்லது ஏதேனும் புத்தகத்தையும் அடிப்படையாகக் கொண்டு அதில் குறிப்பிட்டுள்ள முறையில் நீங்கள் வீட்டில் செய்கிறீர்கள் என்றால் முதலில் அதனை தெளிவாக தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

என்னதான் பார்த்து பார்த்து மிகவும் கவனமாக உணவு பொருளை தயார் செய்தாலும் அதில் சில தவறுகள் ஏற்படுவதுண்டு. எனவே பேக்கிங் செய்யும்போது கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய ஒரு விஷயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

முதலில் விளக்கங்கள் அடிப்படைகளை நன்றாக புரிந்து கொண்டு உணவு பொருளை தயாரிக்க வேண்டியது அவசியமாகும். ஆன்லைன் வீடியோ மூலம் அல்லது புத்தகத்தின் மூலமும் ஏதேனும் ஒரு முறையை அடிப்படையாகக் கொண்டு அதன்படி அடிப்படை பேக்கிங் கற்றுக் கொண்ட பிறகு விதவிதமான ரெசிபிகளை நீங்கள் தயார் செய்யலாம். ஆரம்பத்திலேயே பல வித ரெசிபிகளை தயார் செய்வது உணவை பாழாக்கிவிடும்.
உங்கள் குறிப்புகளில் என்ன விதமான மூல பொருட்களை பயன்படுத்தி பேக்கிங் செய்யப்படுகிறதோ அதே பொருட்களை தான் நீங்களும் பயன்படுத்த வேண்டும். அதற்கு மாற்றாக வேறு ஏதேனும் ஒரு மூலபொருளை பயன்படுத்தி நீங்கள் பேக்கிங் செய்யும் போது அதில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மேலும் சுவையும் மாறக்கூடும்.
நீங்கள் ஆசைப்பட்ட உணவு பொருளை தயாரிப்பதற்கு பலவித முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் பேக்கிங் செய்யும்போது சரியான வெப்ப நிலை சரியான உப பொருட்கள் சரியான முறை ஆகியவை பின்பற்றப்பட வேண்டியது அவசியம். எனவே நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் வரும் வரைக்கும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு இருக்க வேண்டும்.
மூல பொருட்களை கலக்கும் போது அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் மாவை பிசைவது, முட்டையை கலைப்பது போன்ற ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கவனம் செலுத்தி சரியான முறையில் பேக்கிங் செய்தால் தான் இறுதியில் நாம் எதிர்பார்த்த வகையில் முடிவுகள் கிடைக்கும்.
உணவுப் பொருட்களை பேக்கிங் செய்தவுடன் அவற்றை நம் நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தாருக்கு அளித்து அதன் நிறை குறைகளை கேட்டு அறிய வேண்டும். இதன் மூலம் அடுத்த முறை பேக்கிங் செய்யும்போது ஏற்கனவே செய்த தவறை செய்யாமல் இருக்கவும் நம் கற்றுக் கொள்ள முடியும்.
நீங்கள் பேக் செய்த பொருட்களை பல்வேறு நிலைகளில் நீங்களே ருசித்து சோதனை செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் முதல் நாள் ருசியாக இருக்கும் உணவு பொருள், இரண்டு நாட்கள் கழித்து சுவை மாறுவதற்கோ அல்லது கெட்டுப் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. முடிந்த அளவு இரண்டிலிருந்து நான்கு நாட்கள் வரை நீங்கள் பேக்கிங் செய்த பொருள் அதே சுவையுடன் இருந்தால் தான் தரமான உணவுப் பொருளை உங்களால் தயார் செய்ய முடியும்.
First published:

Tags: Baking soda, Cake, Cooking tips