பண்டைய கால உணவு முறையான பணியாரம், புட்டு, எள்ளு மிட்டாய், தேங்காய் மிட்டாய், வெடி தேங்காய் போன்றவைகளுக்கு தற்போதைய உணவு பொருட்கள் ருசியிலோ ஆரோக்கியத்திலோ ஈடாவதில்லை.
தற்போதைய நாட்களில் கேக், பர்கர், பீட்சா உள்ளிட்ட நாகரீகமான உணவுப் பொருள்கள் நம்மை ஆக்கிரமித்து வருகின்றன. ஆனால் பண்டைய கால உணவு முறையான பணியாரம், புட்டு, எள்ளு மிட்டாய், தேங்காய் மிட்டாய், வெடி தேங்காய் போன்றவைகளுக்கு தற்போதைய உணவு பொருட்கள் ருசியிலோ ஆரோக்கியத்திலோ ஈடாவதில்லை.
அந்த வகையில் கேரளாவில் பிரசித்தி பெற்ற ஒரு உணவுப் பொருள் தான் இந்த வெடி தேங்காய். வாழ்வில் ஒருமுறையாவது இந்த வெடி தேங்காயை உண்ணுங்கள். ஏனெனில் இந்த வெடி தேங்காயில் கிடைக்கும் ருசி உங்கள் வாழ்நாளில் வேறு எந்த உணவிலும் கிடைத்திருக்காது.
தேவையான பொருள்கள்
நடுத்தரமான விளைச்சல் உள்ள தேங்காய்
எள்
அவல்
வெல்லம்
பொறி கடலை
செய்முறை
தேங்காயின் நாருகளை உரித்த பின்னர் தேங்காயின் கண் பகுதியில் துளை ஏற்படுத்தி தேங்காய் நீரை வெளியே எடுத்துவிட்டு அதற்கு பதிலாக உள்ளே எள், அவல், வெல்லம், பொறி கடலை ஆகியவற்றை வைத்து சிறிது கோதுமை மாவினால் துளையை அடைக்க வேண்டும்.
அதன் பின்னர் அந்த தேங்காயை நெருப்பு தனலில் போட்டு நன்றாக கருகும் வரை புரட்டிப் போட்டு சுடவேண்டும். பின்னர் வெளியே எடுத்து சிரட்டையை அப்புறப்படுத்தி விட்டால் வெண்மை நிறத்தில் பந்து போன்ற பொருள் கிடைக்கும். அதுவே சுவைமிகுந்த வெடி தேங்காய் ஆகும். இதனை சற்று ஆறிய பின்னர் உண்டால் அமிர்தத்தை மிஞ்சும் சுவை அதில் இருக்கும். டிரைப் பண்ணிப் பாருங்க...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.