ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இட்லிக்கு தேங்காய் பொடி செஞ்சிருக்கீங்களா..? இன்னைக்கு ட்ரை பண்ணி பாருங்கள்..

இட்லிக்கு தேங்காய் பொடி செஞ்சிருக்கீங்களா..? இன்னைக்கு ட்ரை பண்ணி பாருங்கள்..

தேங்காய் பொடி

தேங்காய் பொடி

இட்லிக்கு மிளகாய் பொடி செஞ்சு சாப்பீட்டுருப்பீங்கள். தேங்காய் பொடி செஞ்சு பாருங்கள். காமினேஷன் செம்மையாக இருக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இட்லிக்கு பொதுவாக உளுந்தம் பருப்பு போட்டு பொடி செய்வார்கள். இப்படி தேங்காய் பொடியை யாரும் செஞ்சுருக்கமாட்டார்கள். இதை சாதத்துடன் நல்லெண்ணெய் சேர்த்தோ அல்லது இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். சிலர் தயிர் சாதத்திற்கும் இந்த தேங்காய் பொடியை ஊறுகாய் போல தொட்டு சாப்பிடுவார்கள்.

தேங்காய் பொடி செய்ய தேவையான பொருட்கள்

தேங்காய் - 1 கப்

உளுத்தம் பருப்பு - 1/4 கப்

சிகப்பு மிளகாய் - 6

புளி - சிறிதளவு

பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் தேவையான பொருட்களையெல்லாம் தயாராக எடுத்துக்கொள்ளவும்.
ஒரு  பாத்திரத்தில், எண்ணெய் சேர்த்து மிளகாய், பெருங்காயம், உளுத்தம் பருப்பை போட்டு ஒரு நிமிடம் வ்ரை நன்றாக வறுக்க வேண்டும்.
அத்துடன் புளியையும் சேர்த்து, உளுத்தம் பருப்பு பொன்னிறமாக மாறும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
இப்போது ஒரு தட்டில் எண்ணெயிலிருந்து வடித்து எடுத்து வைத்து ஆற விட வேண்டும்.
மிக்சியை எடுத்து அதில் முதலில் மிளகாய், பெருங்காயம், உளுத்தம் பருப்பு உப்பு சேர்த்து கரகரப்பாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் கடைசியாக தேங்காய் சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும். இது ஆறியவுடன் ஒரு டப்பாவில் போட்டு, பிரிட்ஜில் வைத்து 2 வாரம் வரை பயன்படுத்தலாம்.
இந்த பொடியை எண்ணெய்யுடன் சேர்த்து, சாதம் அல்லது இட்லி தோசையுடன் சாப்பிடலாம்.
First published:

Tags: Chutney, Coconut, Food