• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தேங்காய் பால் பணியாரம் எப்படி செய்வது தெரியுமா?

தேங்காய் பால் பணியாரம் எப்படி செய்வது தெரியுமா?

தேங்காய் பாலில் பணியாரமா? வாங்க எப்படி செய்வது என்று பார்க்கலாம்...

  • Share this:



விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மாலையில் இந்த தேங்காய் பால் பணியாரம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி - அரை கப்

உளுந்து - அரை கப்,

தேங்காய் - ஒன்று,

பால் - ஒரு டம்ளர்,

ஏலக்காய் - சிறிதளவு

சர்க்கரை - கால் கப்

பால் பணியாரம்


செய்முறை

உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும். தண்ணீர் அதிகம் சேர்க்காமல் தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து வைக்கவும்.

அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும். நல்ல பொன்னிறமாக மாறியதும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும். குழந்தைகள் இந்த பணியாரத்தை விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க... வீட்டுக்கு தேவையான சில டிப்ஸ்...


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: