Home /News /lifestyle /

Christmas | திராட்சை ஒயின் வீட்டிலேயே செய்வது எப்படி?

Christmas | திராட்சை ஒயின் வீட்டிலேயே செய்வது எப்படி?

திராட்சை ஒயின் செய்யும் போது அதன் பிரகாசமான வண்ணத்திற்கு கருப்பு திராட்சை பயன்படுத்தவும். வடிகட்டும் போது திராட்சையை அதிகம் கசக்க வேண்டாம்.

    நாம் தினமும் முறையான உடற்பயிற்சி, டயட் உடன், மிகக் குறைந்த அளவு ரெட் ஒயின் குடிப்பதால் இதயம் சம்பந்தபட்ட நோய்கள் ஏற்படாது எனவும், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பே இல்லை எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    தேவையான பொருட்கள்:

    திராட்சை – 5 கிலோ

    சுடுதண்ணீர் – 6 1/2 லிட்டர்

    சர்க்கரை– 6 1/2 கிலோ

    ஈஸ்ட்தேவைக்கு ஏற்ப

    முளை கட்டிய கோதுமை தேவைக்கு ஏற்ப

    செய்முறை:

    முதலில் 6 1/2 லிட்டர் தண்ணீரை சுடாக்க வேண்டும்.
    திராட்சைப் பழத்தினை நன்கு கழுவி சுத்தமான மெல்லிய துணியில் ஈரம் நீக்கி துடைக்கவும். பின்னர் ஒரு ஜாடியை சுத்தப்படுத்தி நன்கு உலர்ந்த திராட்சை பழத்தை அதனுள் போட்டு மத்து வைத்து நசுக்கி விட வேண்டும். அதில் ஆற வைத்த தண்ணீறையும், சர்க்கரையையும் போட்டு ஒரு துணியில பட்டை, கிரம்பு சிறு பொட்டலமாக கட்டி அதனுடன் போடவும்.

    மேலும் படிக்க... கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் கேக் செய்ய ரெசிபி!

    அதில் நான்கு நாள் கழித்து ஈஸ்ட் சேர்க்கவும். பின்னர் முளை கட்டிய கோதுமையை சிறிதளவு சேர்க்க வேண்டும். திரும்பவும் மத்து போட்டு கிளறவும். 30 நாட்கள் கழித்து மிண்டும் கிளறவும்.
    அதன் பிறகு 45 நாட்கள் கழித்து வடிகட்டி பாட்டிலில் ஊற்ரி வைத்து தினமும் குடிக்கலாம். வீடிலேயே எளிய முறையில் தயாரித்த திராட்சை ஒயின் ரெடி.

    மேலும் படிக்க... கிருஸ்மஸ்க்கு இந்த 5 வகையான கேக்குகளை செய்து பாருங்கள்...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Christmas, Food, Wine

    அடுத்த செய்தி