முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்கு மைதா, முட்டை இல்லாமல் கேக் செய்ய வேண்டுமா..? இதோ ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக..!

கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்கு மைதா, முட்டை இல்லாமல் கேக் செய்ய வேண்டுமா..? இதோ ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக..!

இனி வீட்டிலேயே கேக் செய்யலாம்

இனி வீட்டிலேயே கேக் செய்யலாம்

மைதா உடல் நலத்திற்கு கேடு என்பதால் பலர் இதை விரும்ப மாட்டார்கள். இதோடு சைவ பிரியர்கள் என்றால் முட்டையை விரும்ப மாட்டார்கள். மைதா முட்டை இல்லாமல் கடலை மாவைக் கொண்டு நீங்கள் ருசியான மற்றும் ஆரோக்கியமான கேக்குகளை தயார் செய்யலாம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பண்டிகை காலங்கள் வந்தாலே இனிப்புகள் தான் முதலிடம் வகிக்கும். அதிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே சொல்லவே வேண்டாம்… விதவிதமான கேக்குகள் முதல் வைரைட்டியான இனிப்புப் பண்டங்கள் இடம் பெறும். தங்களது நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் கொடுப்பதற்காக பண்டிகை நாள்களில் வீடுகளிலேயே கேக்குகளை ரெடி பண்ணுவார்கள். பொதுவாக பேக்கரி பொருள்கள் என்றாலே, மைதா அல்லது பல வகையான மாவுகள் மற்றும் முட்டைகள் தான் அதிகம் இடம் பெற்றிருக்கும்.

ஆனால் மைதா உடல் நலத்திற்கு கேடு என்பதால் பலர் இதை விரும்ப மாட்டார்கள். இதோடு சைவ பிரியர்கள் என்றால் முட்டையை விரும்ப மாட்டார்கள். மைதா முட்டை இல்லாமல் கடலை மாவைக் கொண்டு நீங்கள் ருசியான மற்றும் ஆரோக்கியமான கேக்குகளை தயார் செய்யலாம்.ஆம் கடலை மாவில் வைட்டமின் பி 6, கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் அதிகளவில் உள்ளதால் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும் உடலில் கொலாஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, மலச்சிக்கலைப்போக்கவும் உதவியாக உள்ளது. இதோடு கோதுமை மற்றும் மைதாவிற்கு நல்ல மாற்றாக கடலை மாவு அமைகிறது. இதோ கடலை மாவைக் கொண்டு எப்படி கேக் செய்யலாம் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம்.

கடலை மாவு கப்கேக் செய்முறை:

தேவையான பொருள்கள்:

  • கடலை மாவு - 100 கிராம்
  • சர்க்கரை பொடி - ¾ கப் அல்லது 170 கிராம்
  • வெண்ணெய் - ½ கப் அல்லது 80 கிராம்
  • தயிர் - 1 கப் அல்லது 250 மிலி
  • பேக்கிங் பவுடர் - 1¼ தேக்கரண்டி
  • பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
  • ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
  • வெண்ணிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்

செய்முறை : மேற்கண்ட பொருள்கள் அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் கேக் மிக்ஸிங்கை பாத்திரத்தில் மாற்றி ஓவனில் வைத்து நீங்கள் கேக் தயாரிக்கலாம்.ஒருவேளை உங்களுக்கு சாக்லேட் கேக் வேண்டும் என்றால், மேற்கண்ட பொருள்களுடன் டார்க் சாக்லேட்டை மிக்ஸ் செய்து நீங்கள் கேக் ரெடி பண்ணலாம். அதன் மேல் சாக்கோலேட் சிரப், செர்ரி பழங்கள் போன்றவற்றை சேர்த்து கூடுதல் சுவையும் அழகும் சேர்க்கலாம்.

Read More : இனி உங்கள் டயட்டி இட்லி சாம்பார் சேர்க்கலாம்... உடல் எடை ஏறாது..! எப்படி தெரியுமா..?

இதுப்போன்று உங்களுக்கு விருப்பமான கேக்குகளைத் தயார் செய்யலாம். நிச்சயம் இது மைதா மற்றும் கோதுமையினால் செய்யப்படும் கேக்குகளை விட ஆரோக்கியமானதாக அமையும். எனவே வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை நீங்கள் ஆரோக்கியமான கேக்குகளுடன் கொண்டாட வேண்டும் என்றால் நிச்சயம் இந்த ரெசிபியை நீங்கள் மேற்கொள்ளலாம்..

First published:

Tags: Cake, Christmas, Food, Health Benefits, New Year