இன்னும் ஓரிரு நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை வரவுள்ளது. கிறிஸ்துமஸ் என்றாலே நினைவுக்கு வருவது கேரோல்சும், கேக்குகளும் தான். அதிலும் கிறித்துமஸ் குக்கீகளுக்கும் ஒரு தனி இடம் உண்டு. குக்கீகள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் வீட்டிலேயே தயாரிக்கப்படும் குக்கீகள் என்றால் இன்னும் சிறப்பு. அதன்படி, ஆரோக்கியமான சிறுதானியங்களை கொண்டு ஒரு க்ளுட்டன் அல்லாத குக்கீகளை எப்படி செய்யலாம் என்பதை பின்வருமாறு வீடியோவில் காணலாம்.
View this post on Instagram
தேவையான பொருட்கள்:
சிறிய திணை(ஊறவைத்தது) - 1 கப்
ஓட்ஸ் - 1/4 கப்
பாதாம் மாவு - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1/4 கப்
எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
ஆர்கானிக் வெல்லம் - 1/2 கப்
லூக் சூடான பால் (தாவர அடிப்படையிலான பால்) - 3 டீஸ்பூன்
வெண்ணிலா எஸ்ட்ராக்ட் - 1 தேக்கரண்டி
ஸ்ட்ராபெரி துண்டுகள் - சிறிதளவு
பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
வெல்லம் - தேவையான அளவு
செய்முறை:
1. திணை மற்றும் ஓட்ஸ் இரண்டையும் நன்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
2. மற்றொரு கிண்ணத்தில் அறை வெப்பநிலையில் ஆர்கானிக் வெல்லம் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். அதனுடன் வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் மற்றும் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய், ஸ்ட்ராபெரி துண்டுகள் போன்றவற்றை சேர்க்கவும்.
3. இப்போது தினை மற்றும் ஓட்ஸ் மாவு வெல்லம் வெண்ணெய் கலவையை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
4. இதனுடன் பால் அல்லது ஏதேனும் தாவர அடிப்படையிலான பாலை மாவுடன் சேர்த்து பேஸ்ட் செய்துக்கொள்ளவும்.
5. மேற்கண்ட வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி மாவினை ஒரு கோன் வடிவ பட்டர் பேப்பரில் வைத்து உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் குக்கீகளை செய்யவும். இதற்கிடையே நீங்கள் உங்கள் அடுப்பை 150 C க்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே சூடாக்க வேண்டும்.
6. குக்கீகளை மேலே தூவ சர்க்கரை பொடியை தயார் செய்து கொள்ளுங்கள்.
Christmas | கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வீட்டிலேயே எளிய முறையில் சாக்லேட் செய்வது எப்படி தெரியுமா?
7. இப்போது குக்கீயை 8-10 நிமிடங்கள் ஓவனில் வைத்து பேக் செய்யவும். பிறகு குக்கீயை ஆற வைத்து பேக்கிங் தாளில் இருந்து எடுக்கவும்.
8. குக்கீகள் மேலே சர்க்கரை பொடியை தூவவும்.
9. இந்த குக்கீகளை ஒரு வாரத்திற்கு வைத்து கூட சாப்பிடலாம். ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும்.
திணை அரிசி புரத சத்து அதிகம் நிறைந்த உணவாகும். தினை தோலின் பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தன்மையை காக்க உதவுகிறது. திணை அரிசியில் கண்களுக்கு நன்மை அளிக்கும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. திணையில் பீட்டா கரோட்டின் அதிகம் இருப்பதால் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும் இதனால் பார்வை தெளிவடையும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Biscuit, Christmas, Cooking tips, Snacks