உலகின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் பல்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. சிலர் பணியிடங்கள் டிசம்பர் 25க்கு முன்னதாக கிறிஸ்துமஸ் விழாக்களை நடத்துகின்றன. பண்டிகை நிகழ்ச்சிகளில் பரிசுகளை பரிமாறிக்கொள்வது, கிறிஸ்துமஸ் பாடல்களைப்பாடுவது, விருந்துகளுக்குச் செல்வது ஆகியவை அடங்கும்.
இந்த விருந்துகளில் மிக முக்கியமாக இருப்பது கேக்தான். அதிலும் ரம் கேக் என்பது மிகவும் எளிமையாக 15 நிமிடத்திலேயே செய்யக்கூடியது. இந்த ரம் கேக்கின் எளிதான ரெசிபியை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
ரம் - 3/4 கப்
முட்டை - 4
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1/2 கப்
முந்திரி - 5
பால் - 3/4 கப்
சர்க்கரை - 1/2 கப்
வெண்ணிலா சாறு - 2 டீஸ்பூன்
மைதா மாவு · 1 கப்
கோகோ தூள் · 1 டீஸ்பூன்
செய்முறை
1. பேக்கிங் ட்ரெயில் வெண்ணெய் தடவி 180 டிகிரி செல்சியஸுக்கு நன்றாக சூடாக்கவும்.
2. பின்னர் பேக்கிங் ட்ரெயில் நறுக்கிய முந்திரியை சமமாக கலக்கவும்.
3. கேக் கலவையை செய்ய, ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் சோடா, கொக்கோ பவுடர் மற்றும் உப்பு சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
4. மற்றொரு கிண்ணத்தில் பொடித்த சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழைக்கவும். குழைத்த வெண்ணை கலவையுடன் அடித்த முட்டை சேர்த்து நன்கு கலக்கவும்.
5. இப்போது இதனுடன் செய்து வைத்துள்ள கேக் கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
6. மேலும் அதில் படிப்படியாக ரம் மற்றும் பால் சேர்த்து, எல்லாவற்றையும் சரியான பதத்தில் கலக்க வேண்டும். மாவு கெட்டியாகும் வரை கலக்கவும்.
7. இந்த மாவை பேக்கிங் ட்ரெயில் ஊற்றி 55 நிமிடங்கள் ஒவனில் வைத்து பேக் செய்யவும்.
8. வெந்ததும் வெளியில் எடுத்து, சூடு ஆறிய பின்னர் விரும்பியபடி அலங்காரம் செய்து பரிமாறலாம்.
9. சுமார் 45 நிமிடங்கள் ஆறவிடவும்.
குக்கரில் செய்வது எப்படி
1. கனமான குக்கரில் பாத்திரம் வைப்பதற்கு ஸ்டாண்டு போல் ஒன்றை அழுத்தி வைக்கவும்.
2. அந்த ஸ்டாண்டின் மேலே கேக் கலவை ஊற்றிய பாத்திரத்தை வைத்து, விசில் போடாமல் மூடவும்.
3. முக்கியமாக அடுப்பை சிம்மிலில் வைத்து வேக வைக்கவும்.
4. ஒரு சிலருக்கு 45 நிமிடத்தில் கேக் முழுமையாக வெந்துவிடும், சிலரின் குக்கர் பதத்திற்கு ஒரு மணி நேரம் கூட ஆகும். பொறுமையோடு இருந்தால் சுவை மாறாமல் அவனில் கிடைப்பது போலவே ரெடியாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.