ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Christmas 2022 | வாழைப்பழ பாயாசம் ரெசிபி... அடுப்பே பற்றவைக்காமல் 5 நிமிடத்தில் செய்துவிடலாம்..

Christmas 2022 | வாழைப்பழ பாயாசம் ரெசிபி... அடுப்பே பற்றவைக்காமல் 5 நிமிடத்தில் செய்துவிடலாம்..

வாழைப்பழ பாயாசம்

வாழைப்பழ பாயாசம்

குறைந்த செலவில் குறைந்த நேரத்தில் அடுப்பே பற்ற வைக்கமல் இந்த பாயாசத்தை செய்யலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பு. உடலுக்கு பல நன்மைகளை தரும்  சுவையான வாழப்பழம் பாயாச ரெசிபி இதோ.!

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிறிஸ்துமஸிற்கு பொதுவாக கேக், சாக்லேட் போன்ற டெஸர்ட் ரெசிபீஸ் செய்வது வழக்கம். ஆனால் அனைவருக்கும் அது விருப்பமான இனிப்பு வகையாக இருக்கும் வாய்ப்பு குறைவு. அப்படிப் பட்டவர்களுக்கு இந்த பாயாச ரெசிபி பிடித்தமானதாக இருக்கும்.

குறைந்த செலவில் குறைந்த நேரத்தில் அடுப்பே பற்ற வைக்கமல் இந்த பாயாசத்தை செய்யலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பு. உடலுக்கு பல நன்மைகளை தரும்  சுவையான வாழப்பழம் பாயாச ரெசிபி இதோ!

தேவையான பொருட்கள் :

பழுத்த மலை வாழைப்பழம் - 4

சர்க்கரை - 100 கிராம்

முழு தேங்காய் - 1

ஏலக்காய் - 5

முந்திரிப்பருப்பு - 25 கிராம்

பேரீச்சம்பழம் - 6

நெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

- தோலை உரித்துவிட்டு வாழைப் பழங்களைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுவும்.

- சிறு சிறு துண்டுகளாக முந்திரிப் பருப்பு, பேரீச்சம் பழத்தையும் நறுக்கி போதிய அளவு நெய்யில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

- தேங்காய்த்துருவலை அரைத்து சிறிதளவு தண்ணீர் விட்டுப் பால் எடுத்துக் கொண்டு அதில் சர்க்கரை போட்டுக் கலந்து வைக்கவும்.

- ஏலக்காயைப் பொடி செய்து தேங்காய் பாலில் போடவும்.

- பிறகு துண்டு செய்த வாழைப்பழம், முந்திரி, பேரீச்சம் பழம் ஆகிய அனைத்தையும் தேங்காய்ப் பாலில் போட்டு நன்றாக கலந்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து குளுமையாக பரிமாறினால் குளு குளு வாழைப்பழ பாயாசம் ரெடி.

கூடுதல் குறிப்பு : விரும்பினால் வாழைப்பழத்தை ஃபோர்க் ஸ்பூன் கொண்டு மசித்த பின்னர் தேங்காய் பாலில் சேர்க்கலாம். மேலும் இந்த பாயாசத்திற்கு மலை வாழப்பழம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஏதேனும் இனிப்பு சுவை மிகுந்த வாழப்பழத்திலும் இதை செய்யலாம். சுவையில் பெரிய மாற்றமேதும் இருக்காது.

First published:

Tags: Banana, Christmas, Sweet recipes