நாம் தினமும் முறையான உடற்பயிற்சி, டயட் உடன், மிகக் குறைந்த அளவு கிரேப் ஒயின் குடிப்பதால் இதயம் சம்பந்தபட்ட நோய்கள் ஏற்படாது எனவும், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பே இல்லை எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இது புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால் இந்த கிருஸ்மஸ்-க்கு கிரேப் ஒயின் செய்து நண்பர்கள் அனைவருக்கும் கொடுங்கள்...
தேவையான பொருட்கள்:
திராட்சை – 5 கிலோ
சுடுதண்ணீர் – 6 1/2 லிட்டர்
சர்க்கரை– 6 1/2 கிலோ
ஈஸ்ட் தேவைக்கு ஏற்ப
முளை கட்டிய கோதுமை தேவைக்கு ஏற்ப
செய்முறை:
முதலில் 6 1/2 லிட்டர் தண்ணீரை சுடாக்க வேண்டும்.
திராட்சைப் பழத்தினை நன்கு கழுவி சுத்தமான மெல்லிய துணியில் ஈரம் நீக்கி துடைக்கவும். பின்னர் ஒரு ஜாடியை சுத்தப்படுத்தி நன்கு உலர்ந்த திராட்சை பழத்தை அதனுள் போட்டு மத்து வைத்து நசுக்கி விட வேண்டும். அதில் ஆற வைத்த தண்ணீறையும், சர்க்கரையையும் போட்டு ஒரு துணியில பட்டை, கிரம்பு சிறு பொட்டலமாக கட்டி அதனுடன் போடவும்.
Also see... Christmas Recipe 2022 | டேஸ்டியான அச்சு முறுக்கு செய்யனுமா..? இதோ ரெசிபி...
அதில் நான்கு நாள் கழித்து ஈஸ்ட் சேர்க்கவும். பின்னர் முளை கட்டிய கோதுமையை சிறிதளவு சேர்க்க வேண்டும். திரும்பவும் மத்து போட்டு கிளறவும். 30 நாட்கள் கழித்து மிண்டும் கிளறவும்.
அதன் பிறகு 45 நாட்கள் கழித்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்து தினமும் குடிக்கலாம். வீடிலேயே எளிய முறையில் தயாரித்த திராட்சை ஒயின் ரெடி.
குறிப்புகள்
1. இதற்கு விதையுள்ள கருப்பு நிற பன்னீர் திராட்சை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
2. பழத்தின் இனிப்பு சுவையைப் பொருத்து சர்க்கரை சேருங்கள், இனிப்பு சற்றுக் குறைவாக இருந்தால் அதற்கு நிகரான சர்க்கரை சேர்க்க வேண்டும்.
3. கண்டிப்பாகப் பிளாஸ்டிக் பாட்டில் அல்லது பிளாஸ்டிக் ஜாரை இந்த செய்முறைக்குப் பயன்படுத்தக் கூடாது. மேலும் இந்த கிரேப் ஒயினை மிக சுத்தமான முறையில் பின்பற்ற வேண்டும்.
4. இந்த ஒயினை இப்போது செய்தால் சரியாக 45 நாட்கள் கழித்துதான் அருந்த முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.