ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Christmas 2022 : பண்டிகை நாள்களில் உறவினர்களுக்குக் கொடுக்க சுவையான கேக்குகளின் ரெசிபீஸ்..!

Christmas 2022 : பண்டிகை நாள்களில் உறவினர்களுக்குக் கொடுக்க சுவையான கேக்குகளின் ரெசிபீஸ்..!

கிறிஸ்துமஸ் ரெசிபீஸ்

கிறிஸ்துமஸ் ரெசிபீஸ்

கிறிஸ்துமஸிற்கு அனைவரும் ஸ்பெஷலாக ஏதேனும் செய்ய நினைக்கும்போது முதலில் நினைவிற்கு வருவது கேக் தான். எளிதில் கிடைக்க கூடிய பொருட்களை வைத்து சுவையான சில பிரபலமான பாரம்பரிய எளிதான ரெசிபிகள் இதோ..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிறிஸ்துமஸ் என்றாலே கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு அடுத்தப்படியாக கேக்குகள் தான் நம் நினைவுக்கு வரும். அதுவும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுக்க விதவிதமாக கேக்குகளைத் தயார் செய்யும் நிலையில், இதையும் கொஞ்சம் நீங்கள் டிரை பண்ணிப்பாருங்கள்..

கிறிஸ்துமஸ் பண்டிகை கேக் ரெசிபிகள்..

வாழைப்பழ வெல்லம் கேக்:

தேவையான பொருள்கள்:

வாழைப்பழம் - 1 1/4 கப்

வெல்லத்தூள் – அரை கப்

அரைத்த இலவங்கப்பட்டை -1 ½ தேக்கரண்டி

ஜாதிக்காய் - 1/4 டீஸ்பூன்

பாதாம் - 1/2 கப்

சர்க்கரை 3/4 கப்

முட்டை - 3

ஆரஞ்சுத் தோல் - 2 டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் -1 1/2 டீஸ்பூன்

பேக்கிங் சோடா -1 டீஸ்பூன்

உப்பு- 1/2 டீஸ்பூன்

மோர் - 2/3 கப்

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் வெண்ணெய்யை உருக்க வேண்டும். இதனுடன் வெல்லம், இலவங்கப்பட்டை, ஜாதிக்காய் மற்றும் பாதாம் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.

பின்னர் ஒரு பெரிய கிண்ணத்தில், மீதமுள்ள 1/4 கப் வெண்ணெயை கிரானுலேட்டட் மற்றும் முட்டையை சர்க்கரையுடன் கலக்கும் வரை ப்ளெண்ட் செய்ய வேண்டும்.மசித்த வாழைப்பழத்தையும் நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும்.

இதோடு பேக்கிங் பவுடர், சோடா மற்றும் உப்பு அகியவற்றைச் சேர்த்து கலக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் பாதி மாவை பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.

மீதமுள்ள வெல்ல சர்க்கரை கலவையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இறுதியில் 180 டிகிரி செல்சியஸில் அடுப்பை சூடு செய்து சுமார் 50 நிமிடங்கள் பான் கேக்கை சூடாக்க வேண்டும். இப்போது சுவையாக வாழைப்பழ வெல்லம் கேக் ரெடியாகிவிட்டது.

ஜிஞ்சர் பிரெட் குக்கீகள்:

தேவையான பொருள்கள்:

சுத்திகரிக்கப்பட்ட மாவு- 1 கிலோ

கோகோ பவுடர்- 60 கிராம்

தேன் - 500 கிராம்

இஞ்சி தூள் - 20 கிராம்

இலவங்கப்பட்டை தூள் -10 கிராம்

ஏலக்காய் தூள்- 45 கிராம்

கிராம்பு பொடி - 5 கிராம்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் சுத்திகரிக்கப்பட்ட மாவு, கோகோ தூள், இஞ்சி தூள், இலவங்க பட்டை தூள், ஏலக்காய் மற்றும் கிராம்பு தூள் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்துக் கொண்டு மாவை உருண்டைகளாகவும், தட்டையான வடிவிலும் செய்ய வேண்டும். பின்னர் பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து சுமார் 2 மணி நேரத்திற்கு குளிரூட்டவும். பின்னர் குக்கீகளை வெளியில் எடுத்து அடுப்பை 350 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சூடாக்க வேண்டும்.

அதன் பின்னர் மாவை சப்பாத்தி தேய்ப்பது போன்று தேய்த்து கொள்ளுங்கள். பின்னர் பிடித்த வடிவத்தில் குக்கீஸ் அச்சு கொண்டு வெட்டி எடுத்து பேக்கிங் ஷீட்டில் வைக்கவும். அதை சுமார் 10 நிமிடம் ஒவனில் வைத்து பேக் செய்து எடுத்த பின்னர் ஆரவைத்து டெகரேட் செய்து உண்டு மகிழுங்கள்.

பாரம்பரிய கிறிஸ்துமஸ் பிளம் கேக்:

தேவையான பொருள்கள்:

மைதா – 500 கிராம்

வெண்ணெய்- 500 கிராம்

சர்க்கரைப் பொடி- 600 முதல் 650 கிராம்

முட்டை – 10 முதல் 12

நாட்டுச்சர்க்கரை – 200 கிராம்

சர்க்கரை பாகு – ஒன்றரை கப்

திராட்சை – 100 கிராம்

பேக்கிங் பவுடர் – 4 தேக்கரண்டி

டுட்டி ஃப்ரூட்டி – 100 கிராம்

முந்திரி பருப்பு – 100 கிராம்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் வெண்ணெய்யை நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் திராட்சை, டுட்டி ஃப்ரூட்டி, முந்திரி பருப்பு மற்றும் ஆரஞ்ச் தோலை பொடியாக நறுக்க வேண்டும். பின்னர் அதனுடன் மைதாவை கலக்கிக்கொள்ள வேண்டும்.

வெண்ணெய் மற்றும் சர்க்கரை கலவையுடன் நாட்டு சர்க்கரை சேர்க்கவும். பின்னர் இதனுடன் கேரமல் சிரப்பை ஊற்றி நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும். இதனுடன் முட்டையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோடு கொஞ்சம் கொஞ்சமாக மைதா கலவையையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

இறுதியில் நெய் தடவிய கேக் டின்னில் ஊற்றி 180 டிகிரி சூட்டில் அவனில் 20 நிமிடங்கள் பேக் செய்தால் போது சுவையான ப்ளம் கேக் ரெடியாகிவிட்டது.

First published:

Tags: Cake, Christmas, Desert Recipes